மயானம் கட்டும் பணியை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்த எம்எல்ஏ சிந்தனைச்செல்வன்

மயானம் கட்டும் பணியை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்த  எம்எல்ஏ  சிந்தனைச்செல்வன்
X

மயானம் கட்டும் பணியை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்த எம்எல்ஏ சிந்தனைச்செல்வன்.

மாமங்கலம் மேல்பாதி கிராமத்தில் மயான கட்டும் பணியை சட்டமன்ற உறுப்பினர் சிந்தனை செல்வன் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

மாமங்கலம் ஊராட்சிக்கு உட்பட்ட மேல்பாதி கிராமத்தில் வாழும் ஆதிதிராவிட மக்கள் "மயான வசதி" வேண்டி மாவட்ட ஆட்சியர், சட்டமன்ற உறுப்பினரிடம் நேரில் சந்தித்து மனு கொடுத்தனர்.

ஆக்கிரமிப்பு செய்திருக்கும் இடத்தை அகற்றி மயான கொட்டகை கட்டுவதற்கு உடனடியாக உத்தரவிட்டனர். அதனைத் தொடர்ந்து மயானம் கட்டுமானம் பணி நடைபெற்று வருகிறது. இந்நிலையில் மயானம் கட்டுமான பணியினை திடீரென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார் சிந்தனைச் செல்வன் எம்எல்ஏ.அதனை தொடர்ந்து பேசிய அவர், பொதுமக்கள் கோரிக்கை ஏற்று அரியலூர் மாவட்டம் முடிவும், கடலூர் மாவட்ட எல்லையுமான செங்கால் ஓடையை பார்வையிட்டு, முழுமையாக அளந்து தூர்வார நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்.

Tags

Next Story
ai solutions for small business