காட்டுமன்னார்கோயில் பகுதியில் மின்னல் தாக்கி 12 ஆடுகள் உயிரிழப்பு

காட்டுமன்னார்கோயில் பகுதியில் மின்னல் தாக்கி 12 ஆடுகள் உயிரிழப்பு
X

மின்னல் தாக்கியதில் உயிரிழந்த ஆடுகள்

காட்டுமன்னார் கோயில் பகுதியில் மின்னல் தாக்கி 12ஆடுகள் உயிரிழந்தன.

கடலூர் மாவட்டம் முழுவதும் பல்வேறு பகுதிகளில் அதிகாலை முதலே விட்டு விட்டு மிதமான மழை பெய்து வருகிறது. இந்த நிலையில் கடலூர் மாவட்டத்தில் சிதம்பரம் காட்டுமன்னார்கோயில் ஸ்ரீமுஷ்ணம் ஆகிய பகுதிகளில் இடியுடன் கூடிய மழை பெய்தது.

இந்நிலையில் வயலில் மின்னல் தாக்கி12 ஆடுகள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தன. மேலும் வயல்வெளியில் ஆடு மேய்க்கச் சென்ற இருவர் காயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். கடலூர் சிதம்பரம் அருகே மின்னல் தாக்கி 8 பேர் சிகிச்சை பெற்று வருவது குறிப்பிடத்தக்கது.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!