கல்லூரி மாணவர் தூக்கிட்டு தற்கொலை!

கல்லூரி மாணவர் தூக்கிட்டு தற்கொலை!
X
காட்டுமன்னார் கோவிலில் கல்லூரி மாணவர் தூக்கிட்டு தற்கொலை!

கடலூர் அருகே அரசு கல்லூரி மாணவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.இந்த சம்பவத்தால் அவரது உறவினர்கள், கல்லூரி சக மாணவர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

கடலூரில் அமைந்துள்ள காட்டுமன்னார்கோவில், அரசு கல்லூரி மாணவர் ஒருவர் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். காட்டுமன்னார்கோவில் பேரரசித் தெருவை சேர்ந்த வெங்கடேசன் என்பவரின் மகன் தினேஷ். இவருக்கு வயது 21. இவர் காட்டுமன்னார்கோவிலில் அமைந்து உள்ள அரசு கலைக் கல்லூரியில் பி.ஏ. தமிழ் இரண்டாம் ஆண்டு படித்து வந்தார்.

சராசரி மாணவராக படிப்பிலும் நன்கு முயற்சி எடுத்து செய்து வந்தவர், ஒரு பக்கம் விளையாட்டிலும் நல்ல திறமை வாய்ந்தவராக செயல்பட்டு வந்தார். இவர் கபடி வீரராகவும் இருந்து வந்தார். இந்த நிலையில் தினேஷ் கடந்த 10 நாட்களாக கல்லூரிக்கு செல்லாமல் ஊர் சுற்றி வந்ததாக தெரிகிறது. இதை அவருடைய தந்தை வெங்கடேசன் கண்டித்ததாக கூறப்படுகிறது. இவர்களுக்குள் ஏற்கனவே பல பிரச்னைகள் இருந்ததாகவும் கூறப்படுகிறது.

அடிக்கடி மகனை நல்வழிப்படுத்த சில சமயம் கடுமையாக கண்டிக்க வேண்டி வந்ததால் தந்தை, மகனை கண்டித்திருக்கிறார். இதனால் மனமுடைந்திருக்கிறார் தினேஷ், அவசரகதியில் தந்தை எதற்காக சொல்கிறார் என்பதே கேட்காமல், தன்னுடைய பிரச்னை குறித்தும் வெளியில் சொல்ல முடியாமல் தவித்திருப்பார் போல தெரிகிறது.

இந்நிலையில், மனமுடைந்த தினேஷ், வீட்டில் உள்ள குளியலறையில் இருந்த கம்பியில் தூக்குப்போட்டு கொண்டுள்ளார். இதனைப் பார்த்து அதிர்ச்சியடைந்த அவருடைய குடும்பத்தினர், தினேசை மீட்டு அவசர அவசரமாக சிகிச்சைக்காக காட்டுமன்னார்கோவிலிலுள்ள அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர்.

அங்கு தினேசை பரிசோதனை செய்த டாக்டர்கள், அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இது குறித்து வெங்கடேசன் காட்டுமன்னார்கோவில் போலீசில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தற்கொலை செய்து கொள்வது எந்த வகையிலும் தீர்வு ஆகாது. தற்கொலை எண்ணங்கள் ஏற்பட்டால் உடனடியாக அதனை அலட்சியம் செய்யாது முறையான சிகிச்சை எடுத்துக் கொள்ள வேண்டும். தற்கொலைக்கு எதிரான இயக்கத்தினர் இதற்கு உதவுகிறார்கள்.

Tags

Next Story
கொடுமுடியில் விவசாயிகள் போராட்டம் - அதிகாரிகள் செயலாற்றாமல் இருந்ததா