நடுரோட்டில் இப்படியும் பண்ணுவோம்ல...அலப்பறையில் ஈடுபட்ட குடிமகன்

நடுரோட்டில் இப்படியும் பண்ணுவோம்ல...அலப்பறையில் ஈடுபட்ட குடிமகன்
X

கடலூர் அருகே குடிபோதையில் நடு ரோட்டில் இருசக்கரவாகனம் மீது அமர்ந்த வாலிபர்.

காட்டுமன்னார்கோயில் அருகே நடுரோட்டில் வண்டி மீது அமர்ந்து செல்போன் பேசிய குடிமகன் பற்றிய பதிவு சமூக வலைத்தளங்களில் பரவியது.

கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் எடையார் சாலையில் ஒருவர் மது போதையில், தான் ஓட்டி வந்த இருசக்கர வாகனத்தை சாலையில் நடுவே படுக்கவைத்து, அதில் கால்மீது கால்போட்டு அமர்ந்து செல்போன் பேசி கொண்டு இருந்துள்ளார்.

அரை மணி நேரத்திற்கு மேலாக நடுரோட்டில் செல்போன் பேசியபடி அமர்ந்திருந்த நபர் வண்டியை எடுப்பார் என காத்திருந்த காரில் வந்தவர் மது போதையில் குடிமகன் செய்யும் அலப்பறைகளை வீடியோவாக எடுத்து அதனை சமூக வலைத்தளங்களில் பதிவிட்டார்.

பொறுமையிழந்த கார் ஓட்டுனர் மற்றும் அந்த சாலையின் வழியே சென்ற வாகன ஓட்டிகள் மதுபோதையில் கால் மேல் கால் போட்டு செல்போனில் கால் பேசிக்கொண்டிருந்த மது பிரியரை அங்கிருந்து அப்புறப்படுத்தினர். இந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வேகமாக பகிரப்பட்டு வருகிறது.

Tags

Next Story
why is ai important to the future