ஸ்ரீமுஷ்ணம் அருகே மளிகை கடையில் பாமாயில் திருடிய 2 பெண்கள் கைது

ஸ்ரீமுஷ்ணம் அருகே மளிகை கடையில் 20 லிட்டர் பாமாயில் திருடிய இரு பெண்களை போலீசார் கைது செய்தனர்.

கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணம் கடைவீதியில் வெங்கடேசன் என்பவர் சூப்பர் மார்க்கெட் நடத்தி வருகிறார்,

அரியலூர் மாவட்டம் கல்லாத்தூர் அருகே தண்டலை கிராமத்தைச் சேர்ந்த கற்பகம், கல்பனா ஆகிய இருவரும் மளிகை சாமான் வாங்க வந்து நீண்ட நேரம் ஆகியும் எந்த ஒரு பொருளையும் வாங்காமல் பாவனை செய்து செய்துகொண்டிருந்தனர்.

இதனை கடையில் வேலை பார்த்த பெண்கள் கவனித்த நிலையில் பாமாயில் எண்ணெயை கட்ட பையில் வைத்து மறைத்து ஆட்டோவில் ஏறி புறப்படும்போது பணிப்பெண்கள் அவரது ஆட்டோவை சுற்றிவளைத்தனர். கூட்டம் அதிகமாகவே இது வேறு ஒரு கடையில் வாங்கியதாக அந்த திருட்டு பெண்கள் இருவரும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

வேறு கடையில் வாங்கிய பில்லை காட்டுமாறு கேட்ட போது முன்னுக்குப் பின் முரணாக பதிலளித்தனர்.

ஸ்ரீமுஷ்ணம் காவல் நிலையத்திற்கு வெங்கடேசன் புகார் தெரிவித்தார் தகவலறிந்த ஆய்வாளர் பாண்டிச்செல்வி உத்தரவின்பேரில் துணை ஆய்வாளர் சுபிக்ஷா மற்றும் பார்த்திபன் மற்ற காவலர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து இருவரையும் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர்.

விசாரணையில் இவர்கள் ஆண்டிமடம் விருத்தாசலம் ஆகிய பகுதிகளில் தொடர்ந்து திருடி வந்ததும் தெரியவந்தது இவர் மீது எட்டு வழக்குகள் நிலுவையில் உள்ளதும் விசாரணையில் தெரியவந்தன. தொடர்ந்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து சிறையில் அடைத்தனர்

Tags

Next Story
ai future project