கடலூர் துறைமுகத்தில் மீன்வளத் துறை ஆணையர் பழனிச்சாமி ஆய்வு
கடலூர் துறைமுகம்
கடலூர் துறைமுகத்தில் நடைபெறும் பல்வேறு கட்டுமான பணிகள் குறித்து மீன்வள துறை ஆணையர் பழனிச்சாமி ஆய்வு மேற்கொண்டார்.
கடலூர் மாவட்டத்தில் சுமார் 49 மீனவ கிராமங்கள் உள்ளது இங்கு 40 ஆயிரத்திற்கும் அதிகமான மீனவர்கள் மீன்பிடித் தொழிலை நேரடியாகவும் மறைமுகமாகவும் செய்து வருகின்றனர். இந்நிலையில் மீன்பிடித் துறைமுகத்தை மேம்படுத்த 100 கோடி ரூபாய் செலவில் பணிகள் நடைபெற்று வருகிறது. இப்பணியில் மீனவர்களின் படகுகள் அணை தளம், வளைகள் உணர வைக்கும் இடம், மீன் விற்பனை மையம் என பல்வேறு கட்டுமான பணிகள் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் இந்த பணிகள் குறித்து தமிழக மீன்வளத்துறை ஆணையர் பழனிச்சாமி ஆய்வு மேற்கொண்டார். இந்த ஆய்வில் துறைமுகத்தில் நடைபெறும் கட்டுமான பணிகளின் தரம், மற்றும் அடிப்படை வசதிகளான குடிநீர் மற்றும் கழிப்பறை போன்ற வசதிகள் முறையாக செய்யப்படுகிறதா என ஆய்வு மேற்கொண்டார். மேலும் இந்த பணிகளின் மூலம் எவ்வளவு மீனவர்கள் பயன்பெறுவார்கள் என்பன போன்ற ஆய்வுகளை மேற்கொண்டார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu