கடலூர் மாவட்ட மைய நூலகத்தில் எழுத்தாளர் ஜெயகாந்தன் படம் திறப்பு

கடலூர் மாவட்ட மைய நூலகத்தில் எழுத்தாளர் ஜெயகாந்தன் படம் திறப்பு
X
கடலூர் மாவட்ட மைய நூலகத்தில் ஞானபீட விருது பெற்ற எழுத்தாளர் ஜெயகாந்தன் படத்தை கடலூர் எம்எல்ஏ ஐயப்பன் திறந்து வைத்தார்

ஞானபீட விருது பெற்ற எழுத்தாளர் ஜெயகாந்தன் 1934-ம் ஆண்டு கடலூரில் விவசாயக் குடும்பத்தில் பிறந்தார். ஐந்தாம் வகுப்பு வரை மட்டுமே படித்துள்ளார்.இலக்கிய உலகில் தனக்கென ஒரு தனி முத்திரையைப் பதித்த ஜெயகாந்தன், 40 நாவல்கள், 200 சிறுகதைகள் பல்வேறு வாழ்க்கை வரலாறு, குறுநாவல்கள், கட்டுரைகள் போன்றவற்றைப் படைத்துள்ளார்.

கடலூரில் பிறந்த எழுத்தாளர் ஜெயகாந்தனுக்கு பெருமை சேர்க்கும் விதமாக கடலூர் மாவட்ட மைய நூலகத்தில் ஜெயகாந்தன் திருவுருவப்படம் திறப்பு விழா இன்று நடைபெற்றது. கடலூர் மண்ணின் மைந்தர் எழுத்தாளர் ஜெயகாந்தன் அவர்களின் திருவுருவப் படத்தினை‌ கடலூர் எம்எல்ஏ ஐயப்பன் திறந்து வைத்தார்.

இந்நிகழ்வில் ஆயிஷா நடராஜன், வாசகர் வட்ட தோழர் பால்கி அவர்கள் மற்றும் வாசகர்கள் கலந்து கொண்டனர்.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!