காவலர் உடற்தகுதி தேர்வில் உரிய சான்று இல்லை என விதவைப்பெண்கள் வெளியேற்றம்

காவலர் உடற்தகுதி தேர்வில் உரிய சான்று இல்லை என விதவைப்பெண்கள் வெளியேற்றம்
X
கடலூரில் காவலர் உடற்தகுதி தேர்வில் உரிய சான்று இல்லை என விதவைப்பெண்களை வெளியேற்றியதால் கதறி அழுத பெண்கள்

கடலூர் அண்ணா விளையாட்டு அரங்கில் இரண்டாம் நிலை காவலர்களுக்கான உடற்தகுதி தேர்வு கடந்த 26ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. தமிழ்நாடு சீருடைப் பணியாளர்கள் தேர்வாணையத்தின் மூலம் நடத்தப்படுகின்ற இந்த தேர்வில் பெண்களுக்கான உடற்தகுதி தேர்வில் 25க்கும் மேற்பட்ட விதவைப் பெண்கள் பங்கேற்றனர்.

இதில் விதவை சான்று பெற்றவர்களிடம், ஆதரவற்ற விதவை சான்று இல்லை என்றும் துணை ஆட்சியர் மற்றும் கோட்டாட்சியரிடம் கையொப்பம் பெற்ற சான்றிதழ் மட்டுமே ஏற்றுக் கொள்ளப்படும் என கூறி ஒன்பது விதவைப் பெண்களை வெளியேற்றியுள்ளனர், இதனால் செய்வதறியாது திகைத்த விதவைப்பெண்கள் கண்ணீர் மல்க கதறி அழுதனர்.

சீருடைப் பணியாளர்கள தேர்வாணையத்தின் மூலம் ஏற்கனவே விண்ணப்பத்தில் விதவை அல்லது ஆதரவற்ற விதவை‌ சான்று வைத்திருந்தால் போதும் என குறிப்பிடப்பட்டு இருந்ததாகவும், தற்போது வட்டாட்சியரிடம் பெற்ற சான்று செல்லாது என வெளியேறியதாகவும் விதவைப் பெண்கள் குற்றம் சாட்டினர். இதனால் கடலூர் பழைய மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

Tags

Next Story
வெப்சைட் ஓபன் பண்ண தெரியலையா? இதோ ஈஸியா கத்துக்கோங்க!