கடலூரில் தக்காளி ஒரு கிலோ ரூ.30 க்கு விற்பனை: அலைமோதும் மக்கள்

கடலூரில் தக்காளி ஒரு கிலோ ரூ.30 க்கு விற்பனை: அலைமோதும் மக்கள்
X

கடலூர் செல்லங்குப்பம் பகுதியில் உள்ள காய்கறி கடையில் தக்காளி கிலோ 30 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

கடலூரில் ஒரு கிலோ தக்காளி 30 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுவதால் கூட்டம் அலைமோதுகிறது.

கடலூரில் தக்காளி கிலோ 30 ரூபாய்க்கு வெங்காயம் கிலோ 25 ரூபாய்க்கும் விற்கப்படுவதால் பொதுமக்கள் போட்டி போட்டுக்கொண்டு வாங்கிச் செல்கின்றனர்.

தொடர்ந்து பெய்து வரும் கனமழையின் காரணமாக கடந்த சில நாட்களாக தக்காளியின் விலை கிலோ 120 முதல் 140 ரூபாய்க்கு மேல் விலை உச்சத்தை எட்டிக் கொண்டிருக்கிறது.

இந்நிலையில் கடலூரில் தக்காளி விலை நேற்று கிலோ 90 ரூபாய்க்கு விற்பனை ஆகி கொண்டிருந்த நிலையில் தற்போது கடலூர் செல்லங்குப்பம் பகுதியில் உள்ள காய்கறி கடையில் தக்காளி கிலோ 30 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

வெங்காயம் கிலோ 25 ரூபாய்க்கும், தக்காளி 30 ரூபாய்க்கும் விற்கப்படுவதால் அந்த கடையில் பொதுமக்கள் தக்காளியும், வெங்காயமும் போட்டி போட்டுக்கொண்டு வாங்கிச் செல்கின்றனர்.

Tags

Next Story
பவானிசாகர் தொகுதியில் புதிய குடிநீர் திட்டங்கள்: 1 கோடி வளர்ச்சி பணிகள் ஆரம்பம்