கடலூரில் தமிழ்நாடு கரும்பு விவசாயிகள் சங்க மாநிலக் குழு கூட்டம்

கடலூரில் தமிழ்நாடு கரும்பு விவசாயிகள் சங்க மாநிலக் குழு கூட்டம்
X

கடலூரில் தமிழ்நாடு கரும்பு விவசாயிகள் சங்க மாநிலக் குழு கூட்டம்

கடலூரில் நடைபெற்ற தமிழ்நாடு கரும்பு விவசாயிகள் சங்கத்தின் மாநிலக்குழு கூட்டத்தில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது

தமிழ்நாடு கரும்பு விவசாயிகள் சங்கத்தின் மாநிலக்குழு கூட்டம் கடலூரில் நடைபெற்றது . கூட்டத்திற்கு மாநில தலைவர் என்.பழனிசாமி தலைமை வகித்தார். கூட்டத்தில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

கடந்த சட்டமன்ற தேர்தலின் போது ஒரு டன் கரும்புக்கு ரூ.4000/ வழங்கப்படும் என வழங்கப்பட்ட வாக்குறுதி கரும்பு விவசாயிகள் மத்தியில் வரவேற்பைப் பெற்றது .. உற்பத்தி செலவுகள் அதிகரித்துள்ள நிலையில் 2021-22 பருவ கரும்புக்கு டன்னுக்கு ரூ.4000/ வழங்கிட‌வும்.

2020-21 ல் அரவை செய்த கரும்புக்கு மாநில அரசு ஊக்கத்தொகையாக ஒரு டன் கரும்புக்கு ரூ 142.50 நேரடியாக விவசாயிகளுக்கு வழங்கிடவும்.

2020-21 நடப்பு பருவத்தில் அரைத்த கரும்புக்கு தனியார் சர்க்கரை ஆலைகள் கூட்டுறவு மற்றும் ‌பொதுத்துறை சர்க்கரை ஆலைகள் பல மாதங்களாக தரவில்லை. கரும்பு பண பாக்கியை ( FRP ) உடனடியாக பெற்றுத்தர நடவடிக்கை எடுக்கவும்.

தரணி சர்க்கரை ஆலைகள் ( வாசுதேவநல்லூர் , போளூர் , கலையநல்லூர் ) 2018-19 ல்‌ அரைத்த கரும்புக்கு ரூ.74 கோடியை கடந்த மூன்று ஆண்டுகளாக தரவில்லை.இதனால்‌ விவசாயிகள் வங்கிகளில் வாங்கிய கரும்பு பயிர் கடனுக்கு வட்டி கூட்டு வட்டி கட்டி சிரமப்படுகின்றனர். தரணி ஆலைகள் தரவேண்டிய கரும்பு பண பாக்கியை வட்டியுடன் பெற்றுத்தர சட்டப்படி நடவடிக்கை எடுக்கவும்.

நான்கு ஆண்டுகளாக மாநில அரசு அறிவித்த கரும்புக்கான பரிந்துரை விலையை தனியார் சர்க்கரை ஆலைகள் தரவில்லை. மாநில அரசின் பரிந்துரை விலையில் ரூ.1217 கோடி பாக்கி வைத்துள்ளனர். தனியார் சர்க்கரை ஆலைகள் தர வேண்டிய SAP பாக்கியை மாநில அரசு பெற்றுத் தரவும் தீர்மானங்கள் எடுக்கப்பட்டது .

இதில் தமிழ்நாடு விவசாய சங்கத்தின் மாநில பொதுச்செயலாளர் சண்முகம் சிறப்புரையாற்றினார் பொதுச் செயலாளர் ரவீந்திரன் பொருளாளர் புதிய மாநில நிர்வாகிகள் மணி சாமி சக்திவேலு காசிநாதன் குண்டு ரெட்டியார் ரவிச்சந்திரன் ஜோதி ராமன் பலராமன் தென்னரசு மற்றும் தமிழ்நாடு விவசாய சங்கத்தின் பலர் கலந்து கொண்டனர்

Tags

Next Story
ai in future agriculture