ஆதரவற்றவர்களுக்கு உணவு அளித்து வரும் கடலூர் தன்னார்வலர்கள்

ஆதரவற்றவர்களுக்கு உணவு அளித்து வரும் கடலூர் தன்னார்வலர்கள்
X

ஆதரவற்றவர்களை தேடிச் சென்று உணவு பொருட்களை வழங்கி வரும் தன்னார்வலர்கள்

கொரோனா ஊரடங்கு காலத்தில் ஆதரவற்றவர்களை தேடிச் சென்று உணவு பொருட்களை வழங்கி வருகின்றனர்.

நாடு முழுவதும் கொரோனா பரவல் காரணமாக அறிவிக்கப்பட்ட ஊரடங்கால் பலரும் தொழில் முடங்கிய நிலையில் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர். பல தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் ஒருங்கிணைந்து ஆதரவற்றவர்களுக்கு உணவளிக்கும் பணியினை செய்து வருகின்றனர்.

கடலூர் மாவட்டத்தில் இக்னைட் தொண்டு மையம் சார்பில் சாலை ஓரங்களில் உள்ள ஆதரவற்றவர்களுக்கு தேடிச்சென்று உணவு வழங்கும் பணியினை செய்து வருகின்றனர். இந்த நிலையில் 100 நாட்களை கடந்து இவர்கள் உணவு வழங்கி வருவது கடலூர் மக்களிடையே பாராட்டுகளைப் பெற்றுள்ளது. சமூக ஆர்வலர்களும், வணிகர் சங்கங்களும், பல்வேறு அமைப்பினரும் தொடர்ந்து தன்னார்வலர்களை ஊக்குவித்து தொடர்ந்து உணவு வழங்க ஏற்பாடுகளை செய்து வருகின்றனர்.

Tags

Next Story
வெப்சைட் ஓபன் பண்ண தெரியலையா? இதோ ஈஸியா கத்துக்கோங்க!