வேளாண்மைக்கு தனி பட்ஜெட் : அமைச்சர் எம் ஆர் கே பன்னீர்செல்வம் தகவல்
அமைச்சர் எம் ஆர் கே பன்னீர்செல்வம்
கடலூர் மாவட்டத்தில் உங்கள் தொகுதியில் ஸ்டாலின் என்ற நிகழ்ச்சி வாயிலாக மாவட்ட மக்களிடம் தேர்தலுக்கு முன்பு குறைகள் குறித்த கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டது. திமுக ஆட்சி பொறுப்பேற்ற 100 நாட்களுக்குள் இதற்கு தீர்வு எட்டப்படும் என அப்போது வாக்குறுதி அளிக்கப்பட்டது.
அதன்படி கடலூர் மாவட்டத்தில் பெறப்பட்ட 19,116 மனுக்கள் மீது அதிகாரிகள் விசாரணை நடத்தினார்கள். அதில் முறையான விலாசம் மற்றும் தகவல்கள் இல்லாத மனுக்களை தவிர 8,953 மனுக்கள் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு பொதுமக்கள் கோரிக்கை நிறைவேற்றப்பட்டு வருகிறது.
கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சியில் நிகழ்ச்சியில் அமைச்சர் எம். ஆர்.கே.பன்னீர்செல்வம், அமைச்சர் சி.வெ.கணேசன் ஆகியோர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டனர். அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் நிருபர்களிடம் கூறுகையில் தமிழக முதலமைச்சர் பொறுப்பேற்று 100 நாட்களுக்குள் மனுக்கள் விசாரிக்கப்பட்டு பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டு உள்ளது.
மேலும் கடலூர் மாவட்டத்தில் தற்போது தொற்று நோய் பரவல் நாளுக்கு நாள் குறைந்து வருகிறது. தற்போது நடைபெறும் பட்ஜெட் கூட்டத்தொடரில் வேளாண்மைக்கு தனி பட்ஜெட் தாக்கல் செய்யப்படவுள்ளது.
மேலும் தற்போது குறுவை சாகுபடி தொடங்குவதற்கு அமைச்சர்கள், அதிகாரிகள் தொடர்ந்து கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வாய்க்கால்கள் தூர்வாரப்பட்டது. உரிய நேரத்தில் ஜூன் 12ஆம் தேதி மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறந்து விட்டதன் காரணமாக தற்போது குறுவை சாகுபடி அதிகரித்துள்ளது. குறிப்பாக குறுவை தொகுப்பு திட்டத்தின் மூலமாக விவசாயிகளுக்கு இலவச உரங்கள் விதைகள் போன்றவற்றை கொடுத்து வேளாண்மையை ஊக்குவித்ததன் விளைவாக இந்த ஆண்டு டெல்டா மாவட்டப் பகுதிகளில் வழக்கத்தைவிட கூடுதலாக ஒரு லட்சம் ஏக்கர் குறுவை சாகுபடி மேற்கொள்ளப்பட்டுள்ளது என்று கூறினார்.
தமிழகத்தில் தற்போது பெய்துவரும் திடீர் மழை காரணமாக பல்வேறு மாவட்டங்களில் நெல் மூட்டைகள் மழைநீரில் நினைந்து பாதிக்கப்படுவதாக அறிந்தவுடன், 20 மாவட்ட கலெக்டர் மற்றும் அதிகாரிகளிடம் பேசி உடனடியாக ஒரு லட்சத்து 70 ஆயிரம் நெல் மூட்டைகள் மீட்டு பாதுகாப்பாக வைக்கப்பட்டது என்றும் கூறினார்
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu