சாதிச்சான்றிதழ் கேட்டு இருளர் இன மக்கள் மாவட்ட ஆட்சியரிடம் மனு

சாதிச்சான்றிதழ் கேட்டு இருளர் இன மக்கள் மாவட்ட ஆட்சியரிடம் மனு
X

சாதிச்சான்றிதழ் கேட்டு மனு அளித்த பொதுமக்கள். 

சாதி சான்றிதழ் இல்லாததால் பிள்ளைகளைக் பள்ளியில் சேர்க்க முடியவில்லை - சாதி சான்றிதழ் உள்ளிட்ட அடிப்படை தேவைகள் வேண்டும்.

கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணம் அருகே உள்ள கோ ஆத்தூர் கிராமத்தைச் சேர்ந்த பழங்குடியின மக்கள், கூட்டாக கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெறும் மக்கள் குறை தீர்ப்பு கூட்டத்தில் மனு ஒன்றை, நேற்று அளித்தனர்.

அதில், இருளர் சமுதாயத்தைச் சார்ந்த எங்களுக்கு சாதி சான்றிதழ், குடும்ப அட்டை மனைப்பட்டா ஆகியவை இல்லாமல் அரசின் சலுகைகள் கிடைக்காமல் சிரமப்பட்டு வருகிறோம். சாதிட்சான்றிதழ் இல்லாததால். எங்கள் பிள்ளைகள் கல்வி பெற இயலாத சூழல் உள்ளதாக. அந்த மனுவில் தெரிவித்திருந்தனர்.

பலமுறை வட்டாட்சியரிடம் மனு அளித்தும் இதுவரை எந்தவித நடவடிக்கையும் இல்லாத நிலையில் மாவட்ட ஆட்சியரை சந்தித்து 70க்கும் மேற்பட்டோர் மனு அளித்தனர்.

Tags

Next Story
ஈரோடு வீட்டுவசதி வாரிய அலுவலகம் இடமாற்றம் - பொதுமக்கள் வசதிக்காக புதிய இடத்தில் செயல்பாடு