பிரதம மந்திரி வீடு கட்டும் திட்டத்தில் முறைகேடு மாவட்ட ஆட்சியரிடம் மனு

ஊராட்சி செயலாளர் முறைகேட்டில் ஈடுபட்டார் என்று கூறி கடலூர் கலெக்டர் அலுவலகத்தில் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்ட ஊராட்சி மன்ற உறுப்பினர்.
கடலூர் மாவட்டம் பண்ருட்டிக்கு உட்பட்ட அக்கடவல்லி ஊராட்சியில் பிரதம மந்திரியின் வீடு கட்டும் திட்டம், நீர் மோட்டார் வாங்குவது, மழை நீர் சேகரிப்புத் தொட்டி கட்டியது, பசுமை வீடு மற்றும் தானே வீடு கட்டும் திட்டம், கழிப்பறை கட்டும் திட்டம் உள்ளிட்டவைகளில் பஞ்சாயத்து எழுத்தர் பார்த்தசாரதி முறைகேட்டில் ஈடுபட்டார்.
அவருக்கு துணை போன பிடிஓ சரவணன் மற்றொரு எழுத்தர் பிரபாகரன் மற்றும் ஊராட்சித் துணைத் தலைவர் ராமகிருஷ்ணன் ஆகிய நால்வரும் 5 கோடிக்கு மேல் முறைகேட்டில் ஈடுபட்டதாகவும்.
அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி அக்கடவல்லி ஊராட்சி மன்ற உறுப்பினர் ராஜேஸ்வரி இன்று கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர்
அரசின் பல்வேறு திட்டங்களில் பணத்தினை மோசடி செய்து மக்களை ஏமாற்றி விட்டனர் என்றும், முந்தைய ஆட்சியரிடம் இதுதொடர்பாக 6 முறை மனு அளித்தும் இதுவரை நடவடிக்கை எடுக்கப்படாததால் உடனடியாக அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தினர்.
இதுவரை 6 முறைக்கு மேல் பழைய ஆட்சியரிடம் மனு அளித்தும் நடவடிக்கை இல்லை எனக்கூறி மனுக்கள் மற்றும் தகவல் அறியும் உரிமைச்சட்டத்தின் கீழ் பெறப்பட்ட தகவல்களை ஆட்சியராக வளாகத்தில் கீழே கொட்டி தரையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். மேலும் இதில் நடவடிக்கை எடுக்கவில்லை எனில் குடும்பத்துடன் தீக்குளிப்போம் எனவும் எச்சரிக்கை விடுத்தார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu