ஒமிக்ரான் எதிரொலி: கொரோனா தடுப்பூசி செலுத்தாதவர்களுக்கு எச்சரிக்கை

ஒமிக்ரான் எதிரொலி: கொரோனா தடுப்பூசி செலுத்தாதவர்களுக்கு எச்சரிக்கை
X

கடலூர் அரசு மருத்துவமனை (பைல் படம்)

கடலூர் அரசு தலைமை மருத்துவமனைக்கு வருபவர்கள் கொரோனா தடுப்பூசி கட்டாயம் செலுத்த வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த சில நாட்களுக்கு முன் தென் ஆப்பிரிக்காவில் கண்டறியப்பட்ட புதிய வகை கொரோனா வைரசான 'ஒமிக்ரான்' தற்போது உலக நாடுகளை அச்சுறுத்தி வருகிறது. இந்த வைரசுக்கு பயந்து பல நாடுகள் தங்களது எல்லைகளை மூடி உள்ளன. ஒமிக்ரான் பாதிப்பு உள்ள நாடுகளில் இருந்து விமான சேவைகளையும் ரத்து செய்யப்பட்டு வருகிறது.

இந்நிலையில் வெளிநாடுகளில் இருந்து தமிழகம் வரும் பயணிகளை கண்காணிக்க தனி குழு அமைக்கப்பட்டு உள்ளது. ஒமிக்ரான் பரவலை கட்டுப்படுத்த தீவிரம் காட்டி வரும் நிலையில் கடலூர் மாவட்டத்தில் வைரஸ் எச்சரிக்கையாக கடலூர் அரசு மாவட்ட மருத்துவமனைக்கு வருவோர் கட்டாயம் தடுப்பூசி போடவேண்டும் என்று கண்காணிப்பாளர் டாக்டர் சாய்லீலா கூறினார்.


Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!