கடலூரில் காவலர்கள் சிகிச்சை பெற புதிய கொரோனா வார்டு
கடலூரில் காவலர்கள் சிகிச்சை பெற கொரோனா புதிய வார்டு திறக்கப்பட்டது
கடலூர் மாவட்டத்தில் கொரோனா நோய் தாக்கத்தினால் காவலர்கள், காவலர்களின் குடும்பத்தார்கள் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற ஆக்ஜிஜன் படுக்கை பெறுவதில் சிரமம் இருப்பதை அறிந்த காவல் கண்காணிப்பாளர் டேன்பேக், கெம்பிளாஸ்ட், ஈ.ஜ.டி பாரி நிறுவனங்கள் உதவியுடன் 100 ஆக்ஸிஜன்உடன் கூடிய படுக்கை வசதிகள் அமைக்க தீர்மானித்து , முதல்கட்டமாக
கடலூர் காவலர் மருத்துவமனையில் ஆக்சிஜனுடன் கூடிய 18 படுக்கை வசதிகள் கொண்ட புதிய கொரோனா வார்டு அமைக்கப்பட்டது.
இந்த புதிய கொரோனா வார்டை வேளாண்துறை அமைச்சர் . எம். ஆர்.கே பன்னீர்செல்வம் அவர்கள் திறந்து வைத்தார்கள். காவல்துறை சார்பில் அமைக்கப்பட்ட புதிய கொரோனா வார்டில் காவலர்கள், காவலர்களின் குடும்பத்தார்கள் மற்றும் முன் களப்பணியாளர்களுக்கு சிகிச்சைக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.
இந்நிகழ்வில் மாவட்ட ஆட்சித் தலைவர் .K. பாலசுப்பிரமணியம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் M. அபிநவ் , மாவட்ட நலப்பணிகள் இணை இயக்குனர் டாக்டர் ரமேஷ்பாபு, சுகாதார பணிகள் துணை இயக்குநர் டாக்டர் செந்தில் குமார். கடலூர் கோட்டாச்சியர் . ஜெகதீஸ்வரன், காவலர் மருத்துவமனை டாக்டர் சாரா செலின்பால், துணை காவல் கண்காணிப்பாளர் K.சாந்தி, தனிப்பிரிவு காவல் ஆய்வாளர் செல்வி.ஈஸ்வரி, டேன் பேக் நிறுவன மனிதவள மூத்த பொதுமேலாளர் இளங்கோவன், ரவிச்சந்திரன் மூத்த பொதுமேலாளர், தொழில்நுட்பம், பொதுமேலாளார் .கிருபாகரன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu