மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கடலூர் புதிய மாவட்ட செயலாளர் தேர்வு

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கடலூர் புதிய மாவட்ட செயலாளர் தேர்வு
X

ஜி.மாதவன்

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கடலூர் மாவட்ட செயலாளராக ஜி.மாதவன் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

மார்க்சிஸ்ட் கட்சியின் கடலூர் மாவட்ட 23-வது மாநாடு டிசம்பர் 28,29 இரண்டு நாட்கள் வடலூரில் நடைபெற்றது. மாநாட்டை துவக்கி வைத்து அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் ஜி. ராமகிருஷ்ணன் பேசினார்.மாநாட்டில் கடலூர் மாவட்ட செயலாளராக ஜி.மாதவன் தேர்வு செய்யப்பட்டார்.

இந்த மாநாட்டில், மாவட்டத்தில் தீண்டாமை பிரச்சினையில் உறுதியான நடவடிக்கை எடுக்க வேண்டும். மழை வெள் ளத்தால் சாலைகள் சேதமடைந்த சாலைகளை போர்க்கால அடிப்படையில் சீரமைக்க வேண்டும். கடலூர் முதுநகரில் இருந்து அதிகாலை சென்னைக்கு செல்ல புதுவை வழியாக இணைப்பு ஏற்படுத்த வேண்டும். கடலூரில் இருந்து புதுவை வழியாக புதிய இருப்புப்பாதை சென்னைக்கு அமைக்க வேண்டும். சுகாதாரத்தை பேணி காக்க மாவட்ட மருத்துவமனைகளில் உயிர்காக்கும் அனைத்து உபகரணங்களை ஏற்பாடு செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட 37 தீர்மனங்கள் நிறைவேற்றப்பட்டன.

Tags

Next Story
ai future project