அரசு தடை உத்தரவினால் கடலூரில் களை இழந்த விநாயகர் சதுர்த்தி விழா

அரசு  தடை உத்தரவினால் கடலூரில் களை இழந்த விநாயகர் சதுர்த்தி விழா
X

கடலூரில் பக்தர்கள் இன்றி வெறிச்சோடி காணப்பட்ட கோயில்

அரசு தடை உத்தரவினால் கடலூரில் விநாயகர் சதுர்த்தி விழா களை இழந்தது.

இன்று இந்துக்களின் முக்கிய பண்டிகைகளில் ஒன்றான விநாயகர் சதுர்த்தி ஆகும்.தமிழகம் முழுவதும் பிரசித்தி பெற்ற விநாயகர் திருக்கோயில்கள்களுக்கு அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் சென்று விநாயகரை வழிபடுவது வழக்கம். பொது இடங்களில் விநாயகர் சிலைகள் வைத்தும் பூஜைகள் நடத்துவார்கள்.

ஆனால் கொரோனா பரவலுக்கு அரசு விதித்துள்ள தடை காரணமாக விநாயகர் சதுர்த்தி தமிழகத்தில் பல கட்டுப்பாடுகளோடு கொண்டாடப்படுகிறது. வெள்ளி சனி ஞாயிறு ஆகிய தினங்களில் ஆலயங்களில் பக்தர்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், கோயில்கள் பெரும்பான்மையானவை வெறிச்சோடி காணப்பட்டன.

அரசின் அறிவிப்பால் விநாயகர் சதுர்த்தி பண்டிகை கடலூரில் களை இழந்து கொண்டாடப்படுகிறது. மதியம் 12 மணி வரையிலும், விநாயகர் சிலைகள் விற்பனையாகமல் கடைவீதிகள் வெறிச்சோடியது. இதனால் வியாபாரிகள் மிகுந்த வேதனை அடைந்தனர். பக்தர்கள் இன்றி கோயில்களில் விநாயகருக்கு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டன.

Tags

Next Story