போதைப் பொருட்கள் ஒழிப்பு: கடலூரில் வணிகர் சங்கம் உறுதிமொழி ஏற்பு

போதைப் பொருட்கள் ஒழிப்பு: கடலூரில் வணிகர் சங்கம் உறுதிமொழி ஏற்பு
X

கடலூர் முதுநகர் பகுதியில் தமிழ்நாடு உணவு பாதுகாப்பு துறை மற்றும் தமிழ்நாடு அனைத்து வணிகர் சங்கங்களின் பேரமைப்பு சார்பில் வணிகர்கள் உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடந்தது.

அரசால் தடை செய்யப்பட்ட பொருட்கள் விற்பனை இல்லை என்ற நிலையை ஏற்படுத்த வேண்டும் வணிகர்களுக்கு வேண்டுகோள்.

கடலூர் முதுநகர் பகுதியில் தமிழ்நாடு உணவு பாதுகாப்பு துறை மற்றும் தமிழ்நாடு அனைத்து வணிகர் சங்கங்களின் பேரமைப்பு சார்பில் வணிகர்கள் உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி வணிகர் சங்கங்களின் பேரமைப்பு கடலூர் தலைவர் ஜி.ஆர்.துரைராஜ் தலைமையில் நடைபெற்றது.

இவ்விழாவில் ஹான்ஸ், குட்கா, புகையிலை, பான்மாசலா, போன்ற பொருட்கள் விற்பனை இல்லை என்ற விழிப்புணர்வு துண்டுப் பிரசுரத்தை வணிகர் சங்க பேரமைப்பு கடலூர் தலைவர் ஜி ஆர் துரைராஜ் வெளியிட கடலூர் முதுநகர் ஆய்வாளர் உதயகுமார் பெற்றுக் கொண்டார்.

அதிக லாபம் கிடைக்கும் என்பதால் அரசால் தடைசெய்யப்பட்ட பொருட்களை வணிகர்கள் விற்கக் கூடாது. அப்படி விற்பனை செய்தால் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் கடையை சீல் வைத்து நடவடிக்கை எடுப்பார்கள்.

இதுபோன்ற செயல்களில் ஈடுபட்டால் சங்கம் ஆதரவாக செயல்படாது என்றும், கடலூர் மாவட்டத்தில் தடை செய்யப்பட்ட பொருட்கள் விற்பனை இல்லை என்ற நிலையை ஏற்படுத்த வேண்டும் எனவும் ஜி.ஆர்.துரைராஜ் வணிகர்களுக்கு வேண்டுகோள் விடுத்தார்.

இந்த உறுதி ஏற்பு நிகழ்ச்சியில் தமிழ்நாடு அனைத்து வணிகர் சங்கங்களின் பேரமைப்பு நிர்வாகிகள், உணவு பாதுகாப்பு துறை கலந்து கொண்டனர்.

Tags

Next Story
காய்கறி, தக்காளி விலை வீழ்ச்சி..!