பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்திய கடலூரில் சைபர் கிரைம் போலீசார்

பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்திய கடலூரில் சைபர் கிரைம் போலீசார்
தமிழகம் முழுவதும் நாளுக்குநாள் நூதன மோசடிகள் நிகழ்ந்த வண்ணம் உள்ளது, இதனை தடுக்க பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்துவது அவசியம் என உணர்ந்த கடலூர் மாவட்ட காவல்துறை பொதுமக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் நிகழ்ச்சி ஒன்றை ஏற்பாடு செய்தது. கடலூர் நகரில் மஞ்சக்குப்பம், பேருந்து நிலையம், மற்றும் எஸ்பிஐ வங்கி கிளை அருகே என பொதுமக்கள் கூடும் இடங்களில் ஆன்லைன் மோசடிகள், சமூக ஊடக மோசடி மற்றும் பிற சைபர் கிரைம் குற்றங்கள் குறித்து சைபர் கிரைம் போலீசார் மூலம் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு செய்யப்பட்டு வருகிறது.
இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சியில் கடலூர் மாவட்ட சைபர் க்ரைம் போலீசார் சுதாகர் பேசுகையில் ஹிந்திக்காரர்கள் டவர் வைக்க இடம் தேவை, ஏடிஎம் கார்டு நம்பர் சொல்லுங்கள், ஆதார் கார்டு நம்பர், முகவரி, OLX முலம் குறைந்த விலையில் வாகனம் தருவதாகவும் கூறி மோசடியில் ஈடுபடுகின்றனர். இதனால் பொது மக்கள் மிக கவனமாக கையாள வேண்டும் இதுபோன்ற தொலைபேசிகள் வந்தால் யாரும் தொலைபேசியில் தகவல் தராதீர்கள் என்றும், காவல்துறையினர் பொது மக்களுடன் நல்லுறவை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும் எனவும் "காவல்துறை உங்கள் நண்பன்" மாவட்ட காவல் காவல் கண்காணிப்பாளர் சக்திகணேஷ் உத்தரவின்பேரில் என்ன பேச்சு ஏற்பாடு செய்யப்பட்டு இருப்பதாகவும் தெரிவித்தார்.
அப்போது கூடிய பொதுமக்கள் போலீசாரிடம் பல்வேறு சந்தேக தகவல்களை கேட்டு தெளிவுபடுத்திக் கொண்டது குறிப்பிடத்தக்கது. இனிவரும் காலங்களில் பொதுமக்கள் மிகவும் விழிப்புணர்வாக இருக்க வேண்டும் என்று கடலூர் காவல் துறையினர் கேட்டுக் கொண்டனர். வங்கியில் OTP மூலமாக அல்லது வேறு வகையில் மோசடி செய்து தங்கள் பணத்தை வங்கியில் இருந்து எடுக்கப்பட்டால் பதட்டம் வேண்டாம் உடனே காவல்துறை எண் 155260 ஐ தொடர்பு கொண்டு தகவல் கொடுத்தால் அந்த பணத்தை உங்களுக்கு திருப்பி தர காவல்துறை உங்களுக்கு உதவியாக இருக்கும்.மேலும் வேறு ஏதேனும் சைபர் கிரைம் குற்றம் சம்பந்தமாக www.cybercrime.gov.in என்ற வலைதளத்தில் புகார் அளிக்கலாம் என்று அறிவுறுத்தினர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu