கடலூர் மாவட்டம் புவனகிரி பேரூராட்சியில் நாளை மறுநாள் மறுவாக்குப்பதிவு

கடலூர் மாவட்டம் புவனகிரி பேரூராட்சியில் நாளை மறுநாள் மறுவாக்குப்பதிவு
X
புவனகிரி பேரூராட்சி 4வது வார்டில் இயந்திர பழுது காரணமாக மறுவாக்குப்பதிவு நாளை மறு நாள் நடைபெற உள்ளது.

கடலூர் மாவட்டம் புவனகிரி பேரூராட்சியில் 18 வார்டுகள் உள்ளன. இதில் 17-வார்டு களுக்கான தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்ட நிலையில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் ஏற்பட்ட கோளாறு காரணமாக புவனகிரி பேரூராட்சியின் 4வது வார்டு வாக்கு எண்ணிக்கை 8 மணி நேரமாக தாமதமானது.

ஐந்து பொறியாளர்கள் உதவியோடு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தை சரி செய்ய முயற்சித்த போதும் அதனை சரி செய்ய முடியாமல் அதிகாரிகள் திணறினர்.

இந்நிலையில் மறுவாக்குபதிவு நடத்தக் கோரி எழுந்த கோரிக்கையைத் தொடர்ந்து கடலூர் மாவட்டம் புவனகிரி பேரூராட்சி 4வது வார்டு 4AV வாக்குச்சாவடியில் நாளை மறுநாள் மறுவாக்குப்பதிவு நடத்தப்படும் என மாநில தேர்தல் ஆணையம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

Tags

Next Story
கொமதேக தலைவரின் மாபெரும் அறிவிப்பு: திமுக கூட்டணியில் எந்த பிரச்சனையும் இல்லை!