கடலூரில். விபத்தில் இறந்த முப்படை தளபதி பிபின் ராவத் பிறந்தநாள் விழா

கடலூரில். விபத்தில் இறந்த  முப்படை தளபதி பிபின் ராவத் பிறந்தநாள் விழா
X

பிபின் ராவத் உருவ படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

முப்படை தலைமை தளபதி பிபின் ராவத் பிறந்தநாளை முன்னிட்டு கடலூரில் முன்னாள் படை வீரர்கள் மலர்தூவி அஞ்சலி செலுத்தினர்.

கடலூரில் சைன் இந்தியன் சோல்ஜர்ஸ்சோசியல் வெல்ஃபேர் பவுண்டேஷன் (பிபின் ராவத் ஐம்பொன் சிலை அமைக்கும் குழு) மற்றும் முன்னாள் படை வீரர்கள் சார்பாக மறைந்த முப்படைத் தளபதி பிபின் ராவத்தின் 65 வது பிறந்த தினம் சிறப்பாக கொண்டாடப்பட்டது.

இதில் சைன் இந்தியன் சோல்ஜர்ஸ்சோசியல் வெல்ஃபேர் பவுண்டேஷன் நிறுவனர் மிலிட்டரி பாபு தலைமையில் முன்னாள் படை வீரர்கள் மற்றும் பவுண்டேஷன் நிர்வாகிகள் மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.

அப்போது பிபின் ராவத்திற்கு புதுடெல்லியில் அமைந்துள்ள யுனைட்டட் சர்வீஸ் இன்ஸ்டியூட் இல் நிரந்தர இருக்கை ஏற்படுத்திக் கொடுத்த மத்திய அரசுக்கு நன்றி கூறினர்.

நிகழ்ச்சிக்கு மிலிட்டரி பாபு தலைமை தாங்கினார். சிறப்பு விருந்தினர்கள் தெய்வசிகாமணி, முன்னாள் படைவீரர்கள் அலுவலக இணை இயக்குனர் அரவிந்த், கடலூர் முன்னாள் படை வீரர்கள் மதியழகன், சௌந்தரராஜன், குமார், எஸ். சாரல் சங்கர், இளையராஜா, அருளரசன்துறை உள்பட பலர் கலந்து கொண்டனர். சுரேஷ் கண்ணன்நன்றி கூறினார்

Tags

Next Story
அங்காளம்மன் கோவிலில் பக்தி நிறைந்த பெண்கள் பால்குட ஊர்வலத்தின் கோலாகலம்..!