கடலூர் மாவட்டத்தில் 27-ம் தேதி பள்ளி. கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு

கடலூர் மாவட்டத்தில் 27-ம் தேதி பள்ளி. கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு
X

கடலூர் மாவட்ட கலெக்டர் பாலசுப்பிரமணியம்.

தொடர் மழையால் பள்ளி, கல்லூரிகளுக்கு 27-ம்தேதி விடுமுறை அளித்து கடலூர் மாவட்ட ஆட்சியர் பாலசுப்பிரமணியம் உத்தரவிட்டுள்ளார்.

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது. மேலும், தற்போது வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வங்கக் கடலில் புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகி இருப்பதால் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மழை பெய்து வருகிறது.

கடலூர் மாவட்டம் முழுவதும் மாலை முதல் பரவலாக மழை பெய்து வருகிறது. இந்நிலையில் கடலூர் மாவட்டத்தில் உள்ள பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு நாளை (27.11.2021) விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் பாலசுப்ரமணியம் உத்தரவிட்டுள்ளார்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!