கடலூர் நகர்ப்புற தேர்தல்: அ.தி.மு.க. சார்பில் விருப்ப மனு வினியோகம்

கடலூர் நகர்ப்புற தேர்தல்: அ.தி.மு.க. சார்பில் விருப்ப மனு வினியோகம்
X
கடலூர் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடும் அ.தி.மு.க.வினர் விருப்ப மனுக்களை முன்னாள் அமைச்சர் சம்பத்திடம் வழங்கினர்.
கடலூர் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் அ.தி.மு.க. சார்பில் போட்டியிடுபவர்கள் விருப்ப மனுக்களை வழங்கினார்கள்.

தமிழகத்தில் நடைபெற உள்ள நகர்புற உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு இன்று முதல் மூன்று நாட்கள் அ.தி.மு.க. சார்பாக நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட விரும்புபவர்களிடம் விருப்ப மனுக்கள் வழங்கப்பட்டு வருகிறது.

கடலூர் வடக்கு மாவட்ட கழகம் சார்பில் போட்டியிட விருப்பம் தெரிவிக்கும் வேட்பாளர்களுக்கு விருப்ப மனு விநியோகத்தினை முன்னாள் அமைச்சர் எம். சி. சம்பத் வழங்கி தொடங்கி வைத்தார்.

நகராட்சி மற்றும் பேரூராட்சிகளுக்கு நடைபெறும் இந்த நகர்ப்புற அமைப்புகளுக்கான தேர்தலில் அ.தி.மு.க. சார்பில் போட்டியிட ஏராளமானோர் விருப்ப மனுக்களை வாங்கிச் சென்றனர். கடலூர் நகரம், நெல்லிக்குப்பம் நகரம் பண்ருட்டி நகரம், மேல்பட்டாம்பாக்கம் பேரூராட்சி, தொரப்பாடி பேரூராட்சி என தனித்தனியாக மேஜைகள் அமைக்கப்பட்டு விருப்பமனுக்கள் வழங்கப்பட்டன.

Tags

Next Story
ஈரோடு வீட்டுவசதி வாரிய அலுவலகம் இடமாற்றம் - பொதுமக்கள் வசதிக்காக புதிய இடத்தில் செயல்பாடு