கடலூரில் அ.தி.மு.க. அமைப்பு தேர்தல்: தொண்டர்கள் ஆர்வம்

கடலூரில் அ.தி.மு.க. அமைப்பு தேர்தல்: தொண்டர்கள் ஆர்வம்
X

கடலூரில் அ.தி.மு.க. உட்கட்சி தேர்தலில் தொண்டர்கள் விண்ணப்ப படிவங்களை வாங்கி சென்றனர்.

அ.தி.மு.க. உட்கட்சித் தேர்தல் இன்றும் நாளையும் நடைபெறும் நிலையில் கடலூரில் அ.தி.மு.க. நிர்வாகிகள் படிவங்களை பெற்றனர்.

அ.தி.மு.க. இரண்டாம் கட்ட அமைப்பு தேர்தல் இன்றும், நாளையும் நடைபெறுகிறது, அ.தி.மு.க. கடலூர் மாவட்டத்தில் 4 மாவட்டங்களாக செயல்பட்டு நான்கு மாவட்டங்களிலும் அ.தி.மு.க. அமைப்பு தேர்தல் நடைபெறும் நிலையில் கடலூர் வடக்கு மாவட்ட கழகம் சார்பில் ஐந்து இடங்களில் அமைப்பு தேர்தல் நடைபெறுகிறது.

கடலூர் வடக்கு மாவட்ட கழகம் சார்பில் முன்னாள் அமைச்சர் எம். சி. சம்பத் தலைமையில் கடலூர் பாதிரிகுப்பம் கட்சி அலுவலகத்தில் தேர்தல் பொறுப்பாளர்களாக நியமிக்கப்பட்டுள்ள கழக அமைப்புச் செயலாளர் ஆசை மணி, மயிலாடுதுறை மாவட்ட கழக செயலாளர் பவுன்ராஜ் ஆகியோர் முன்னிலையில் அ.தி.மு.க. நிர்வாகிகள் விண்ணப்ப படிவங்களை ஆர்வமுடன் பெற்று சென்றனர்.

அதேபோல கடலூர் மேற்கு மாவட்ட கழகம் சார்பில் கடலூர் திருவந்திபுரம் தனியார் திருமண மண்டபத்தில் அ.தி.மு.க. அமைப்பு தேர்தலுக்கான விருப்பமனு பெரும் நிகழ்ச்சி மாவட்ட கழக செயலாளர் சொரத்தூர்.இரா ராஜேந்திரன் தலைமையில் தேர்தல் பொறுப்பாளர் மயிலாடுதுறை மாவட்ட கழக செயலாளர் பவுன்ராஜ் முன்னிலையில் விருப்ப மனுக்களை பெற்று சென்றனர்.

Tags

Next Story
வாட்ஸ்அப், ஸ்கைப் மோசடிகள்: டிஜிட்டல் அரெஸ்ட் மோசடி விழிப்புணர்வு