கடலூர் மாவட்ட கலெக்டருக்கு கொரோனா -தேசிய கொடி ஏற்றினார் கூடுதல் ஆட்சியர்

கடலூர் மாவட்ட கலெக்டருக்கு கொரோனா -தேசிய கொடி ஏற்றினார் கூடுதல் ஆட்சியர்
X

கடலூர் மாவட்ட கூடுதல் கலெக்டர் ரஞ்சித் சிங் காவலர்கள் அணிவகுப்பை பார்வையிட்டார்.

கடலூர் அண்ணா விளையாட்டு அரங்கில் 73வது குடியரசு தினவிழாவில் கூடுதல் ஆட்சியர் ரஞ்சித்சிங் தேசியக் கொடியை ஏற்றினார்.

73 வது குடியரசு தின விழாவையொட்டி கடலூர் அண்ணா விளையாட்டு அரங்கில் நடைபெற்ற குடியரசு தின விழாவில் கூடுதல் ஆட்சியர் ரஞ்சித் சிங் தேசிய கொடியினை ஏற்றி வைத்து காவல்துறை அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார்.

கடலூர் அண்ணா விளையாட்டு அரங்கில் நடைபெற்ற இந்தியத் திருநாட்டின் 73 வது குடியரசு தின விழா கொண்டாட்டத்தில் கடலூர் மாவட்ட கூடுதல் ஆட்சியர் ரஞ்சித் சிங் மூவர்ன தேசிய கொடியினை ஏற்றி வைத்து, பின்னர் காவல்துறையினரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார். பின்னர் காவல் துறை, வருவாய் துறை, சுகாதாரத் துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளிலும் சிறப்பாக செயல்பட்ட 139 அரசு அலுவலர்களுக்கு பாராட்டு சான்றிதழ்களும் பதக்கங்களும் வழங்கப்பட்டது.

மேலும் 2022 ஆம் ஆண்டிற்கான தமிழக முதல்வரின் காவலர் பதக்கம் 86 காவலர்களுக்கு வழங்கப்பட்டது. கொரோனா கட்டுப்பாடு காரணமாக பள்ளி, கல்லூரி மாணவ மாணவிகள் பங்கு பெறும் கலை நிகழ்ச்சிகளுக்கு முற்றிலும் தடை விதிக்கபட்டு பொதுமக்கள் பங்கேற்காமல் அரசு அதிகாரிகள் மட்டும் சமூக இடைவெளியுடன் கலந்துகொண்டு நிகழ்ச்சி நடைபெற்றது.

கடந்த 2 நாட்களுக்கு முன்பு கடலூர் மாவட்ட ஆட்சியர் பாலசுப்பிரமணியம் கொரோனா தொற்று காரணமாக வீட்டிலேயே தனிமைப்படுத்திக் கொண்டுள்ளார். இதன் காரணமாக மாவட்ட கூடுதல் ஆட்சியர் ரஞ்சித்சிங் தேசியக் கொடியை ஏற்றி வைத்தது குறிப்பிடத்தக்கது.

Tags

Next Story