சுருக்குமடி வலையை பயன்படுத்த அனுமதிக்க கோரி உண்ணாவிரதப் போராட்டம்

சுருக்குமடி வலையை பயன்படுத்த அனுமதிக்க கோரி  உண்ணாவிரதப் போராட்டம்
X

சுருக்குமடி வலையை பயன்படுத்த அனுமதிக்க கோரி கடலூரில் மீனவர்கள் உண்ணாவிரதப் போராட்டம்

கடலூரில் சுருக்குமடி வலையை பயன்படுத்த அனுமதிக்க கோரி 50 மீனவ கிராம மீனவர்கள் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்

கடலூர் துறைமுகத்தில் தாழங்குடா, தேவனாம்பட்டினம் அக்கரை கோரி நொச்சிக்குப்பம் உள்ளிட்ட 50க்கும் மேற்பட்ட மீனவ கிராமத்தைச் சேர்ந்த மீனவர்கள் மீன்பிடித் தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர்

இந்நிலையில் சுருக்குமடி வலையை பயன்படுத்தி மீன் பிடித்தால் மீன் வளம் முற்றிலும் அழிந்துவிடும் என்பதால் தமிழக அரசு சுருக்குமடி வலையை பயன்படுத்தி மீன் பிடிக்க தடைவிதிக்கப்பட்டுள்ளது. மேலும் அதிகத் திறன் கொண்ட விசைப்படகுகள் மூலம் மீன் பிடிக்கவும் மற்றும் ஐந்து நாட்டிக்கல் சுற்றளவில் இன் பிடிக்கவேண்டும் இரவு நேரங்களில் கடலில் தங்கி மீன் பிடிக்கக்கூடாது எனவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

இதனை எதிர்த்துகடலூர் தேவனாம் பட்டினத்தில் 50க்கும் மேற்பட்ட மீனவ கிராமங்களைச் சேர்ந்த மீனவர்கள் சுருக்குமடி வலையை பயன்படுத்த அனுமதிக்கக் கோரி உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

Tags

Next Story
வெப்சைட் ஓபன் பண்ண தெரியலையா? இதோ ஈஸியா கத்துக்கோங்க!