அண்ணாமலை உண்ணாவிரதம்: காங்கிரஸ் தலைவர் அழகிரி கண்டனம்

அண்ணாமலை உண்ணாவிரதம்: காங்கிரஸ் தலைவர்  அழகிரி கண்டனம்
X

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி மாநில தலைவர் கே எஸ் அழகிரி

மேகதாது அணை கட்டும் விவகாரத்தில் பிரதமர் மோடி வீடு முன்பு தான் உண்ணாவிரதம் இருந்திருக்க வேண்டும் என்று அண்ணாமலைக்கு அழகிரி கண்டனம்

கடலூர் மாவட்டம் சிதம்பரம் நகர தமிழ் மாநில காங்கிரஸ் சேர்ந்தவர்கள் நூற்றுக்கும் மேற்பட்ட தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகி காங்கிரஸ் கட்சியில் இணையும் விழா சிதம்பரத்தில் நடைபெற்றது.

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி மாநில தலைவர் கே எஸ் அழகிரி தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் கட்சியில் இணைந்தவர்களுக்கு சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் மாநில தலைவர் கே எஸ் அழகிரி‌ கர்நாடகாவில் மேகதாது அணை கட்டுவதை தடுத்து நிறுத்த வேண்டும் அணை கட்டப்பட்டால் டெல்டா பகுதி பாதிக்கப்படும்.

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை மேகதாது அணை கட்டும் விவகாரத்தில் புதுடெல்லியில் பிரதமர் மோடி வீடு முன்பு அல்லது சம்மந்தப்பட்ட மத்திய அமைச்சர் வீடு முன்பு தான் உண்ணாவிரதம் இருந்திருக்க வேண்டும். அதைவிடுத்து டெல்டா பகுதியில் போராட்டம் நடத்துவது என்பது மக்களை ஏமாற்றும் வேலை என்று தெரிவித்தார்
தமிழகத்தில் முதல்வர் ஸ்டாலின் ஆட்சிக்கு வந்த பிறகு 100 நாட்களில் என்னென்ன திட்டங்கள் நிறைவேற்ற முடியுமோ திட்டங்களை நிறைவேற்றி வருகிறது. தற்பொழுது தமிழகத்தில் வேளாண்மை என தனி பட்ஜெட் போடப்படுவதை தமிழக காங்கிரஸ் சார்பில் வரவேற்கிறேன், இது நல்ல முயற்சி இதற்காக தமிழக முதல்வருக்கு பாராட்டு தெரிவித்துக் கொள்கிறேன் என்றார்

ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தின் மூலம் இந்தியாவிலுள்ள ஏழ்மையில் உள்ள மக்களை ஏழ்மையில் இருந்து விடுவித்தது காங்கிரஸ் அரசு என்றும் தெரிவித்தார் செய்தியாளர் சந்திப்பின்போது மாநில செயலாளர் சித்தார்த்தன் ரவி விருதாச்சலம் காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் எம் ஆர் ராதா கிருஷ்ணன் கடலூர் தெற்கு மாவட்ட தலைவர் செந்தில்நாதன் உடன் இருந்தனர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!