பரங்கிப்பேட்டையில் பேரூராட்சி சார்பில் படகு குழாம் சீரமைக்கும் பணி

பரங்கிப்பேட்டையில் பேரூராட்சி சார்பில் படகு குழாம் சீரமைக்கும் பணி
X

பரங்கிப்பேட்டை படகு குழாம்

பரங்கிப்பேட்டையில் பேரூராட்சி சார்பில் கடற்கரையோரம் படகு குழாம் சீரமைக்கும் பணி துரிதமாக நடந்து வருவதால் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி

சிதம்பரம் அடுத்த பிச்சாவரத்தில் உலக புகழ்பெற்ற வனச்சுற்றுலா மையத்தில், இயற்கை சூழலுடன், மாங்குரோஸ் தாவரங்களை சுற்றுலா பயணிகள் படகுகளில் சுற்றிப் பார்த்துச் செல்கின்றனர். அது போல், சுற்றுலா பயணிகளை கவரும் வகையில், பரங்கிப்பேட்டையில் சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக் கழக கடல்வாழ் உயிரின ஆராய்ச்சி மையம் எதிரே, வெள்ளாற்று கரையோரம் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு படகு குழாம் உருவாக்கி செயல்பட்டு வந்தது.

இந்த படகு குழாமில், படகு சவாரி, ஓய்வு குடில்கள், சிறிய உணவக வசதி இருந்ததால், உள்ளூர் மற்றும் வெளியூர் சுற்றுலா பயணிகள் என தினமும் ஏராளமானவர்கள் வந்து சென்றனர்.கடந்த 2011ம் ஆண்டு ஏற்பட்ட தானே புயலின்போது, படகு குழாம் முற்றிலும் சேதமடைந்தது. பின் படகு குழாமை சீரமைக்காததால் உள்ளூர் மற்றும் வெளியூர் சுற்றுலா பயணிகள் வருகை குறைந்தது.

இந்நிலையில், சேதமடைந்த படகு குழாமை, சீரமைக்க பரங்கிப்பேட்டை பேரூராட்சி நிர்வாகம் சார்பில் ரூ. 58 லட்சத்து, 80 ஆயிரம் மதிப்பில் திட்ட மதிப்பீடு தயாரிக்கப்பட்டு, சீரமைக்கும் பணி கடந்த ஒரு ஆண்டாக நடந்து வருகிறது. படகு சவாரிக்கு டிக்கெட் கொடுக்கும் அறை, படகு நிற்கும் இடத்திற்கு செல்லும் நடைப்பாதை பணி முடிந்துள்ளது.

ஓய்வு குடில்கள், பூங்கா மற்றும் விளையாட்டு உபகரணங்கள் போன்றவை புதுப்பிக்கப்பட்டு வருகிறது. படகு குழாமின் சுற்றுச்சுவர் புதியதாக அமைக்கும் பணிகள் நடந்து வருகிறது. இந்த மாதத்திற்குள் பணி முடிந்து திறப்பு விழா நடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மீண்டும் படகு குழாம் செயல்பட உள்ளதால், உள்ளூர் பொதுமக்கள் மற்றும் வெளியூர் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

Tags

Next Story
100% இத மட்டும் ஃபாலோ பண்ணுங்க.. ஒரே மாசத்துல 10,12 கிலோ எடை குறையலாம்..! ரொம்ப ஈஸியா..! | Easy weight loss diet plan in Tamil