கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் 3 பேருக்கு ஒமிக்ரான்?

கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் 3 பேருக்கு ஒமிக்ரான்?
X
தென் ஆப்பிரிக்காவில் இருந்து சிதம்பரம் வந்த 3 நபர்களுக்கு கொரோனா- ஒமிக்ரான் பாதிப்பு உள்ளதா என சோதனை

உலகையே அச்சுறுத்திய கொரோனா பரவல் தற்போது உருமாறி ஒமிக்ரான் என்ற பெயரில் வேகமாக பரவி வருகிறது. இந்த நிலையில் தென்னாப்பிரிக்காவிலிருந்து சிதம்பரத்தை சேர்ந்த கணவன் மனைவி இரண்டு குழந்தைகளுடன் கடந்த வாரம் சென்னை வந்துள்ளனர்.அவர்களை ஏழு நாட்கள் தனிமை படுத்துக்கொள்ள சுகாதாரத் துறையினர் அறிவுறுத்தினர்.

இந்நிலையில் கணவன்-மனைவி மற்றும் ஒரு குழந்தைக்கு தொற்றுநோய் உறுதிசெய்யப்பட்ட நிலையில் ஒமிக்கிரான் அறிகுறி உள்ளதா? என அவர்களிடம் இருந்து எடுக்கப்பட்ட மாதிரிகளை சோதனைக்கு அனுப்பி உள்ளனர்.

மேலும் தொற்று நோய் பாதிக்கப்பட்ட மூன்று நபர்களும் சிதம்பரம் ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

Tags

Next Story
பவானிசாகர் தொகுதியில் புதிய குடிநீர் திட்டங்கள்: 1 கோடி வளர்ச்சி பணிகள் ஆரம்பம்