சிதம்பரம் நடராஜர் கோயில் ராஜகோபுரத்தில் ஏற்றப்பட்ட தேசியக் கொடி

சிதம்பரம் நடராஜர் கோயில் ராஜகோபுரத்தில் ஏற்றப்பட்ட தேசியக் கொடி
X

சிதம்பரம் நடராஜர் கோவில் ராஜகோபுரத்தில் ஏற்றப்பட்ட தேசிய கோடி.

சுதந்திர தின விழாவையொட்டி சிதம்பரம் நடராஜர் கோயிலில் தீட்சிதர்கள் தேசிய கொடி ஏற்றி கொண்டாடினர்.

நாடு முழுவதும் 75வது சுதந்திர தின விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. வேறு எந்த கோவிலிலும் இல்லாத ஒரு பெருமை கடலூர் மாவட்டம் சிதம்பரம் நடராஜர் கோயிலுக்கு உண்டு. ஒவ்வொரு ஆண்டும் சுதந்திர தினத்துக்கும் சிதம்பர நடராஜர் ஆலய ராஜகோபுரத்தில் தேசிய கொடி ஏற்றுவது வழக்கம்.

சிதம்பரம் நடாராஜர் ஆலயத்தின் ராஜ கோபுரத்தில் தீட்சிதர்களின் சார்பில் இன்று 75வது சுதந்திர தின விழாவையொட்டி தேசியக் கொடி ஏற்றப்பட்டு, இனிப்புகள் வழங்கப்பட்டது. சுதந்திரப் போராட்ட காலத்தில் தீட்சிதர்கள் போராட்டத்தில் கலந்து கொண்டு, ஆதரவாக பொன்னும் பொருளும் கொடுத்தததாக வரலாற்றில் கூறப்படுகிறது.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!