தீட்சிதர்களிடம், தேசிய குழந்தைகள் பாதுகாப்பு ஆணைய உறுப்பினர் விசாரணை

தீட்சிதர்களிடம், தேசிய குழந்தைகள் பாதுகாப்பு ஆணைய உறுப்பினர் விசாரணை
X

சிதம்பரம் தீட்சிதர்களிடம் விசாரணை நடத்திய தேசிய குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையம் உறுப்பினர்

புது டெல்லி தேசிய குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையம் உறுப்பினர் டாக்டர் ஆனந்த் சிதம்பரம் தீட்சிதர்களிடம் விசாரணை நடத்தினார்

சிதம்பரம் நடராஜர் கோவில் தீட்சிதர்கள் மீதுள்ள வெறுப்பால் குழந்தை திருமணங்கள் நடைபெறுவதாக பொய் வழக்குகள் போடப்பட்டுள்ளன. குழந்தைகளுக்கு கன்னி தன்மை பரிசோதனையான தடை செய்யப்பட்ட இருவிரல் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது என தமிழக கவர்னர்ஆர்.என்.ரவி குற்றம் சாட்டினார்.

இந்நிலையில் கடந்த 9-ம் தேதி சிறுமியிடம் இரு விரல் பரிசோதனை நடைபெற்றதா என்பது குறித்து கடலூர் மாவட்ட குழந்தைகள் நலக்குழுத் தலைவர் லட்சுமி வீரராகவன் மற்றும் உறுப்பி னர்கள் இளங்கோவன், பெனிட்டா, முகுந்தன், செந்தில் உள்ளிட்ட 5 பேர் கொண்ட குழுவினர் தீட்சிதர்களிடம் விசாரணை நடத்தி விசாரணை அறிக்கையை அனுப்பி வைத்தனர்.

நடராஜர் கோவில் தீட்சிதர்கள் சிறுமிகளிடம் கன்னி தன்மை பரிசோதனைக்கு தடை செய்யப்பட்ட இருவிரல் பரிசோதனை நடைபெற்றதா என்பது குறித்து விசாரணை நடத்த புது டெல்லி தேசிய குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையம் உறுப்பினர் டாக்டர் ஆனந்த் சிதம்பரத்திற்கு வருகை தந்தார்.

பொதுப்பணித்துறை விருந்தினர் விடுதிக்கு வருகை தந்த அவரை கடலூர் மாவட்ட ஆட்சியர் (பொறுப்பு) ராஜசேகரன், காவல் கண்காணிப்பாளர் ராஜாராம், சிதம்பரம் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் ரகுபதி, உதவி ஆட்சியர் சுவேதாசுமன் ஆகியோர் வரவேற்றனர்.

பின்னர் ஆணைய உறுப்பினர் ஆனந்த் நடராஜர் கோவிலுக்கு சென்று ஆதிமூலநாதர் சந்நிதி அருகே அறுபத்து மூவர் சந்நிதியில் அமர்ந்து பாதிக்கப்பட்ட தீட்சிதர்களிடம் விசாரணை நடத்தினார். பின்னர் சிதம்பரம் அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்கு சென்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ராஜாராம், மாவட்ட ஆட்சியர் (பொறுப்பு) ராஜசேகரன் மற்றும் இருவிரல் பரிசோதனை செய்யப்பட்டதாக கூறப்பட்ட வழக்கில் விசாரணை அதிகாரியான காவல் ஆய்வாளர், பரிசோதனை மேற்கொண்ட மருத்துவர் உள்ளிட்டோரிடம் விசாரணை மேற்கொ ண்டார்.

பின்னர் பரிசோதனை செய்யப்ப ட்டதாக கூறப்படும் சிறுமிகளின் வீடுகளுக்கு சென்று சிறுமிகளிடமும், அவர்களது பெற்றோரிடமும் தனியாக விசாரணை மேற்கொண்டு பதிவு செய்தார். அப்போது கோவில் வக்கீல் சந்திரசேகரன் உடனிருந்தார்.

பின்னர் செய்தியாலர்களிடம் அவர் கூறுகையில், தற்போது 3கட்ட விசாரணை நடத்தினேன். முதல் கட்டமாக பாதிக்க ப்பட்ட தீட்சிதர்களிடமும், இரண்டாவதாக காவல்துறை அதிகாரிகளிடமும்,, மூன்றாவது பாதிக்கப்பட்ட குழந்தைகளிடம் விசாரணை நடத்தப்பட்டு பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்த மொத்த கோர்வையான விசாரணை அறிக்கையை ஆணைய தலைவரிடம் அளிக்க உள்ளேன். அந்த அறிக்கையின் பேரில் நடவடிக்கை எடுக்கப்படும். இந்த அறிக்கை 2 அல்லது 3 நாட்களுக்குள் தயார் செய்து அனுப்பி வைக்கப்படும்.

தீட்சிதர்கள், சிறுமியிடம் விசாரணை செய்த போது குழந்தை திருமணம் நடைபெறவில்லை. எங்களை வற்புறுத்தியதால் திருமணம் நடைபெற்றதாக ஒப்புக்கொண்டோம் என கூறினர்.

இருவிரல் பரிசோதனை நடைபெற்றதற்கான ஆதாரம் இல்லை. ஆனால் தனி உறுப்பு தொடப்பட்டு பரிசோதனை நடைபெற்றது உண்மை. இருவிரல் பரிசோதனை நடைபெறவில்லை என்று கூறினார்.

Tags

Next Story
கொடுமுடியில் விவசாயிகள் போராட்டம் - அதிகாரிகள் செயலாற்றாமல் இருந்ததா