ஜெய்பீம் பட விவகாரம்:வன்னியர் சங்கம் சார்பில் நீதிமன்றத்தில் வழக்கு

ஜெய்பீம் பட விவகாரம்:வன்னியர் சங்கம் சார்பில் நீதிமன்றத்தில் வழக்கு
X

ஜெய்பீம் படத்தில் நடிகர் சூர்யா

ஜெய்பீம் படத்திற்கு எதிராக வன்னியர் சங்கம் சார்பில் நடிகர் சூர்யா, ஜோதிகா மீது சிதம்பரம் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது.

இருளர் இனமக்களின் வாழ்வியலை இயக்குனர் ஞானவேல் இயக்கி நடிகர் சூர்யா நடித்த 'ஜெய் பீம்' திரைப்படம் ஓ.டி.டி.யில் வெளியாகிய‌ இப்படம் பொதுமக்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது,

வரவேற்புக்கு ஏற்றவாறு அதிக அளவு விமர்சனங்களையும் பெற்ற திரைப்படம் ஜெய்பீம். படத்தில் வன்னியர் சங்கத்தை இழிவுபடுத்தும் விதமாகவும், மறைந்த வன்னியர் சங்க தலைவர் காடுவெட்டி குருவின் பெயரை குற்றவாளி கதாபாத்திரத்துக்கு வைத்துள்ளதாகவும்,குற்றவாளி கதாபாத்திரத்தின் பின்பக்கத்தில் வன்னியர்களின் அடையாளமான அக்னி குண்டத்தை காட்டியதாகவும் சர்ச்சை எழுந்தது. படத்தில் வன்னியர்களின் அடையாளமாக அக்னிகுண்டம் மாற்றப்பட்ட பிறகும் ஜெய்பீம் மீதான சிக்கல் தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது.


இந்நிலையில்,ஜெய் பீம் படத்தின் நடிகர் சூர்யா, தயாரிப்பாளர் ஜோதிகா, இயக்குனர் ஞானவேல் உள்ளிட்டோர் மீது சிதம்பரம் நீதிமன்றத்தில் வன்னியர் சங்க தலைவர் அருள்மொழி வழக்கு தொடர்ந்துள்ளார்.அவதூறு பரப்புதல்,இரு சமூகத்தினரிடையே வன்முறையை தூண்டுதல்,பொது அமைதிக்கு குந்தகம் விளைவித்தல் போன்ற பிரிவுகளின் கீழ் இந்த வழக்கு தொடரப்பட்டுள்ளது.

Tags

Next Story
இரு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடமாக மாறிய நாமக்கல் ஆட்சியா் அலுவலகம்!