அண்ணாமலைப் பல்கலை பட்டமளிப்பு விழா: தமிழக ஆளுநர் பங்கேற்பு

அண்ணாமலைப் பல்கலை பட்டமளிப்பு விழா: தமிழக ஆளுநர் பங்கேற்பு
X

அண்ணாமலை பல்கலைக்கழகம் - கோப்புப்படம் 

அண்ணாமலைப் பல்கலை.யில் அக்.4-இல் நடைபெறும் பட்டமளிப்பு விழாவில் தமிழக ஆளுநா் ஆா்.என்.ரவி பங்கேற்கிறார்

சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக 85-ஆவது பட்டமளிப்பு விழா பல்கலைக்கழக சாஸ்திரி அரங்கில் வருகிற 4-ஆம் தேதி மாலை 5 மணிக்கு நடைபெறவுள்ளது.

விழாவுக்கு பல்கலைக்கழக வேந்தரும், தமிழ்நாடு ஆளுநருமான ஆா்.என்.ரவி தலைமை வகித்து, மாணவ, மாணவிகளுக்கு பட்டங்களை வழங்கி சிறப்புரையாற்றுகிறார். தமிழ்நாடு உயா் கல்வித் துறை அமைச்சரும், பல்கலைக்கழக இணைவேந்தருமான பொன்முடி பங்கேற்று பேசுகிறார்

பெங்களூரு இந்திய விண்வெளி ஆராய்ச்சி மைய சந்திராயன் 3 திட்ட இயக்குநா் ப.வீரமுத்துவேல் பட்டமளிப்பு விழா உரையாற்றுகிறார் விழாவில் துணைவேந்தா் ராம.கதிரேசன், பதிவாளா் ரா.சிங்காரவேல் மற்றும் ஆட்சிமன்றக் குழு உறுப்பினா்கள், புல முதல்வா்கள் உள்ளிட்டோர் பங்கேற்கின்றனா்.

Tags

Next Story
மாஜி அதிமுக பொறுப்பாளர் வாபஸ், செந்தில்முருகன் விளக்கம்