சிதம்பரத்தில் ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் முகமூடி அணிந்து போராட்டம்

சிதம்பரத்தில்  ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் முகமூடி அணிந்து போராட்டம்
X
சிதம்பரத்தில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் முகமூடி அணிந்து போராட்டம் நடத்தினர்.
சிதம்பரத்தில் மத்திய அரசை கண்டித்து முகமூடிஅணிந்து இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் போராட்டம் நடத்தினர்.

டெல்லி குடியரசு தின விழாவில் அலங்கார ஊர்தி அணிவகுப்பில் தமிழக அரசின் விடுதலைப் போராட்டம் குறித்த அலங்கார ஊர்திக்கு அனுமதி மறுக்கப்பட்டது. இந்த சம்பவத்தைக் கண்டித்து சிதம்பரத்தில் இன்று ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர்.

சிதம்பரம் பெரியார் சிலை அருகில் ஒன்று திரண்ட ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் வேலுநாச்சியார், பாரதியார் போன்ற விடுதலை போராட்ட தலைவர்களின் முகமூடிகளை அணிந்து, மத்திய அரசுக்கு எதிராக கண்டன முழக்கங்களை எழுப்பினர்.

இதையடுத்து முகமூடியை அணிந்தபடியே ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் சிதம்பரம் மேலவீதியில் கண்டன முழக்கமிட்டபடி ஊர்வலமாக சென்று அண்ணா சிலை அருகிலும் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.இதில் ஏராளமானோர் பங்கேற்றனர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!