சிதம்பரத்தில் கட்டாயத் தடுப்பூசி திட்டத்திற்கு எதிராக ஆர்ப்பாட்டம்

சிதம்பரத்தில் கட்டாயத் தடுப்பூசி திட்டத்திற்கு  எதிராக ஆர்ப்பாட்டம்
X

கட்டாய தடுப்பூசிக்கு எதிராக சிதம்பரத்தில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.

கடலூர் மாவட்டம் சிதம்பரம் கோட்டாட்சியர் அலுவலகம் முன் கட்டாயத் தடுப்பூசி திட்டத்திற்கு எதிராக ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

கட்டாயத் தடுப்பூசி சட்டம் விரோதம் என்றும், விரும்புவோருக்கு மட்டுமே தடுப்பூசி போட வேண்டுமென்றும், தடுப்பூசியால் உயிரிழந்தோர், மற்றும் உடல்நலம் பாதிக்கப்பட்டவர்களுக்கு அரசு இழப்பீடு தரவேண்டும், என்றும் அரசியலமைப்பு அடிப்படை மருத்துவ உரிமையை மறுத்து சித்தமருத்துவம் உள்ளிட்ட மாற்று மருத்துவங்களை புறக்கணித்து அரசு நடத்தும் அலோபதி ஒற்றை மருத்துவ திணிப்பை கண்டித்தும் கடலூர் மாவட்டம் சிதம்பரம் கோட்டாட்சியர் அலுவலகம் எதிரில் கண்டன ஆர்பாட்டம் நடைபெற்றது.

தமிழ்த் தேசிய பேரியக்க பொதுக்குழு உறுப்பினர், தமிழக இளைஞர் முன்னணி துணை பொதுச்செயலாளர் தோழர் ஆ.குபேரன் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் 60க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டு கட்டாய தடுப்பூசிக்கு எதிராக முழக்கங்கள் எழுப்பினர்.

ஆர்ப்பாட்டத்தினை விளக்கி நாம் தமிழர் கட்சி சுற்றுச்சூழல் பாசறை மாநில துணைத் தலைவர் கி.காசிராமன், இயற்கை வழி வாழ்வியல் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் இரா.சுதாகர், தமிழர் தேசிய முன்னணி மாணவரணி தமிழக அமைப்பாளர் செ.செயப்பிரகாசு நாராயணன், தமிழ்த் தேசியப் பேரியக்க தலைமைக் குழு உறுப்பினர் க.முருகன், செம்மை வாழ்வியல் நடுவம் ஒருங்கிணைப்பாளர் கு. சிவப்பிரகாசம், தமிழ்த் தேசிய பேரியக்க சீர்காழி நகர செயலாளர் கிஅரவிந்தன் உள்ளிட்டோர் கண்டன உரையாற்றினர்.

ஆர்ப்பாட்டத்தில் பெண்கள் குழந்தைகள் என பங்கேற்ற பொதுமக்கள் பறை இசைத்தும், கட்டாய தடுப்பூசி சட்ட விரோதம் என்று முழக்கங்களை எழுப்பினர்.

நிகழ்விடத்திற்கு வந்த நகர காவல் ஆய்வாளர். ஆறுமுகம் தலைமையிலான காவல்துறை ஆர்ப்பாட்டத்திற்கு அனுமதி இல்லை. கலைந்து செல்ல வேண்டுமென கோரினர். கட்டாயத் தடுப்பூசியின் பின் விளைவுகளை விளக்கியும், நீதிமன்ற தீர்ப்புகளை காட்டியும் பதில் அளித்தப்பின் காவல்துறை ஆர்பாட்டம் செய்துகொள்ள அனுமதி அளித்தனர்.

ஒருமணி நேரத்திற்கும் மேலாக நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில், வேந்தன் சுரேசு, சிவ.அருளமுதன், பா.பிரபாகரன்,வே.சுப்ரமணிய சிவா உள்ளிட்ட பேரியக்க நிர்வாகிகளும் நாம் தமிழர் கட்சி, தமிழர் தேசிய முன்னணி, இயற்கை வாழ்வியல் கூட்டமைப்ப்பினரும் திரளாக கலந்துகொண்டனர்.

சென்னை, பண்ருட்டி, காட்டுமன்னார்கோயில், குறிஞ்சிப்பாடி, விருத்தாசலம் உள்ளிட்ட பகுதியிலிருந்து சமூக ஊடகங்களின் மூலம் தகவல் அறிந்து ஆர்ப்பாட்டத்தில் தன்னெழுச்சியாக கலந்துகொண்டது குறிப்பிடத்தக்கது.

Tags

Next Story
இரு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடமாக மாறிய நாமக்கல் ஆட்சியா் அலுவலகம்!