/* */

சிதம்பரம் நடராஜர் கோவிலில் ஆருத்ரா தரிசன விழா தேரோட்டம் நடந்தது

சிதம்பரம் நடராஜர் கோயில் ஆருத்ர தரிசன விழாவையொட்டி இன்று தேரோட்டம் நடந்தது.

HIGHLIGHTS

சிதம்பரம் நடராஜர் கோவிலில் ஆருத்ரா தரிசன விழா தேரோட்டம் நடந்தது
X

சிதம்பரம் நடராஜர் கோவிலில் இன்று தேரோட்டம் நடந்தது.

சிதம்பரம் நடராஜர் கோவிலில் மார்கழி மாத ஆருத்ரா தரிசன விழா கடந்த 11-ஆம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. முக்கிய விழாவான ஆருத்ரா தரிசன விழா நாளை நடைபெற உள்ளது. இன்று தேரோட்டம் நடந்தது. நேற்று இரவு வரை தேரோட்டத்திற்கு மாவட்ட நிர்வாகம் அனுமதி அளிக்கவில்லை. நேற்று இரவு 10 மணிக்கு மேல்தான் தேர் செல்வதற்கு அனுமதி அளித்தனர்.

இந்த நிலையில் இன்று காலை தேரோட்டம் துவங்கி நடந்து வருகிறது. நடராஜர், சிவகாமசுந்தரி, முருகர், விநாயகர், சண்டிகேஸ்வரர் ஆகிய சுவாமிகள் தேரில் வைக்கப்பட்டு நான்கு வீதிகளிலும் வலம் வந்து கொண்டிருந்தது.

ஏராளமான பக்தர்கள் இந்த திருவிழாவில் பங்கேற்று தேரை வடம் பிடித்து இழுத்து வந்தனர். இரவு தேர் நிலைக்கு வந்து சேர்ந்தது. நாளை மாலை ஆருத்ரா தரிசன விழா சிறப்பாகக் கொண்டாடப்பட உள்ளது.

Updated On: 19 Dec 2021 1:55 PM GMT

Related News