சிதம்பரம் நடராஜர் கோவில் கோபுர உச்சியில் ஏற்றப்பட்டது தேசிய கொடி
குடியரசு தினவிழாவையொட்டி சிதம்பரம் நடராஜர் கோவில் கோபுர உச்சியில் தேசிய கொடி ஏற்றப்பட்டது.
1947 ஆண்டு முதல் இந்திய சுதந்திர தினம் மற்றும் குடியரசு தின விழாக்களில் சிதம்பரம் நடராஜர் கோயில் பொது தீட்சிதர்கள் சிதம்பரம் நடராஜர் ஆலயத்தில் உள்ள நடராஜப் பெருமானிடம் வெள்ளித்தட்டில் இந்திய தேசியக் கொடியை வைத்து பூஜித்து மேளதாளத்துடன் ஊர்வலமாக கோவிலின் நான்கு பிரகாரங்களும் சுற்றிவந்து கிழக்கு கோபுரமான 152 அடி உயரமுள்ள கிழக்கு கோபுரத்தில் தேசிய கொடி ஏற்றினர்.
எழுபத்தி மூன்று ஆண்டுகளாக சுதந்திர தினம் மற்றும் குடியரசு தினத்தில் ஆசியாவிலேயே சிதம்பரம் நடராஜர் ஆலயத்தில் தான் 152 அடி உயரமுள்ள கிழக்கு கோபுரத்தில் தேசிய கொடி ஏற்றப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இன்று காலையில் நடராஜப்பெருமானுக்கு ஆறு மணி அளவில் தீபாரதனை நடந்து முடிந்தவுடன் பொது தீட்சிதர்கள் வெள்ளித் தட்டில் இந்திய தேசியக் கொடியை வைத்து மேளதாளத்துடன் நடராஜ பெருமானின் திருவடியில் வைத்து பூஜித்து இன்று 73வது குடியரசு தினம் கொண்டாடப்பட்டது.
கொடி ஏற்றிய உடன் பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டன. இது சிதம்பரம் நடராஜர் கோவில் பொது தீட்சிதர்கள் சார்பில் நடைபெற்றது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu