சிதம்பரம் நடராஜர் கோவில் சம்பந்தமாக ஆர்ப்பாட்டம் நடத்த 144 தடை உத்தரவு

சிதம்பரம் நடராஜர் கோவில் சம்பந்தமாக ஆர்ப்பாட்டம் நடத்த 144 தடை உத்தரவு
X

சிதம்பரம் நடராஜர் கோயில் (பைல்படம்)

சிதம்பரம் நடராஜர் கோயிலில் கனகசபை மீது ஏறிய விவகாரம் தொடர்பாக 144 தடை உத்தரவு பிறப்பித்து கோட்டாட்சியர் அறிவித்துள்ளார்.

சிதம்பரம் நடராஜர் கோயிலில் கனகசபை எனக் கூறப்படும் சிற்றம்பல மேடையில் ஏறி சாமி தரிசனம் செய்வது தொடர்பாக இரு தரப்பு தீட்சிதர்கள் இடையே பிரச்சனை இருந்து வந்த சூழலில், ஒரு பெண் பக்தரை ஒரு தீட்சிதர் சிற்றம்பல மேடைக்கு அழைத்துச் சென்றபோது பிரச்சனை ஏற்பட்டுள்ளது.

பெண் பக்தர் சாமி கும்பிட சென்றபோது சாதிப்பெயரை சொல்லி திட்டியாக அளித்த புகாரில் சிதம்பரம் நடராஜர் கோயில் தீட்சிதர்கள் 20 பேர் மீது வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். ஏற்கெனவே தீட்சிதர்கள் மீது கொலை முயற்சி புகார் அளித்த சக தீட்சிதர் சாமி கும்பிட சென்றபோது மீண்டும் தீட்சிதர்கள் தடுத்ததால் பரபரப்பு ஏற்பட்டது. தீட்சிதர்களிடையே அதிகரித்து வரும் மோதலால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் சிதம்பரம் நடராஜர் கோவிலில், பெண் பக்தரை தாக்கிய தீட்சிதரை கைது செய்யவும், சிற்றம்பல மேடையில் ஏறி தரிசனம் செய்ய அனுமதிக்க கோரியும், அரசியல் கட்சியினர் மற்றும் பல்வேறு அமைப்புகள் வலியுறுத்தி வருகின்றன.

சிதம்பரம் நடராஜர் கோவிலில் நடராஜர் சன்னிதியில் மேடையேறி தேவாரம் திருவாசகம் பாடுவதற்கு சம்பந்தமாக ஏற்பட்டுள்ள சட்டப் பிரச்சனைகள் காரணமாக அரசின் அடுத்த முடிவு சட்ட வல்லுனர்கள் ஆலோசிக்கப்பட்டு வருவதால் இன்று முதல் ஒரு மாத காலத்திற்கு சிதம்பரம் பகுதியில் மேற்கண்ட நடராஜர் கோவில் சம்பந்தமாக அரசியல் கட்சிகள் சமூக இயக்கங்கள் ஆர்ப்பாட்டம் செய்ய 144 தடை உத்தரவு பிறப்பித்துள்ளதாக சிதம்பரம் ஆர்.டி.ஓ. ரவி உத்தரவு பிறப்பித்து அறிவிப்பு செய்துள்ளார்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!