சிதம்பரம் அருகே வீட்டின் மீது பாய்ந்த கார்

சிதம்பரம் அருகே  வீட்டின் மீது பாய்ந்த கார்
X

மரத்தில் மோதி வீட்டின் மேல் அந்தரத்தில் தொங்கிய கார்

சிதம்பரம் அருகே திரைப்பட சண்டைக் காட்சியின்போது கார் பறப்பதுபோல் பறந்து சென்று அருகில் இருந்த ஒரு வீட்டின் மீது பாய்ந்த கார்

சிதம்பரம் அருகே அகரம் பகுதியை சேர்ந்தவர் மகேஷ். இவர் அவரது உறவினரை பார்ப்பதற்காக புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனைக்கு செல்வதற்காக காரில் அகரம் பகுதியை சேர்ந்த அறிவழகன், சாந்தி, கஜம் மூர்த்தி, கார்த்திக் சிவகுமார், ஆகிய 7 பேரும் புதுச்சேரி நோக்கி காரில் சென்றனர்.

காரை மகேஷ் அதிவேகமாக ஓட்டிச் சென்றதாக கூறப்படுகிறது இந்நிலையில் கரிக்குப்பம் பகுதியில் சென்றபோது கார் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து மரத்தின் மீது மோதியது, அந்த கார் மரத்தில் மோதிய வேகத்தில் திரைப்பட சண்டைக் காட்சியின்போது கார் பறப்பதுபோல் பறந்து சென்று அருகில் இருந்த ஒரு வீட்டின் மீது பாய்ந்தது தலைகீழாக தொங்கி கொண்டிருந்தது.

இதில் அதிர்ச்சி அடைந்த வீட்டில் இருந்தவர்கள் அலறி அடித்துக் கொண்டு வெளியே ஓடிவந்தனர் அதிர்ஷ்டவசமாக அவர்கள் யாருக்கும் காயம் ஏதும் ஏற்படவில்லை இந்த விபத்தில் மகேஷ் உள்பட 7 பேரும் பலத்த காயம் அடைந்தனர்.

இதில் காரை ஓட்டிய மகேஷ் என்பவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். காயம் அடைந்த 6 பேர் சிதம்பரம் ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இதுகுறித்து பரங்கிப்பேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர் திரைப்பட பாணியில் மின்னல் வேகத்தில் சென்ற கார் கூரை வீட்டின் மீது தலைகீழாக தொங்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags

Next Story
இரு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடமாக மாறிய நாமக்கல் ஆட்சியா் அலுவலகம்!