நாம் தமிழர் கட்சி வேட்பாளர் மாட்டு வண்டியில் வந்து மனுத்தாக்கல்

நாம் தமிழர்  கட்சி வேட்பாளர் மாட்டு வண்டியில் வந்து மனுத்தாக்கல்
X
மேளதாளங்கள் முழங்க மாட்டு வண்டியில் கரும்புகளை கட்டிக்கொண்டு ஊர்வலமாக வந்து வேட்பு மனு தாக்கல் செய்தார் நாம் தமிழர் கட்சி வேட்பாளர்.

சிதம்பரம் சட்டமன்ற தொகுதியில் போட்டியிட நாம் தமிழர் கட்சியின் சார்பில் நடராஜன் கிருஷ்ணமூர்த்தி என்பவரை கட்சி நிர்வாகம் தேர்வு செய்திருந்தது. அவர் வேட்புமனு தாக்கல் செய்வதற்காக சிதம்பரம் பேருந்து நிலையம் அருகில் உள்ள காந்தி சிலையில் இருந்து மேளதாளங்கள் முழங்க மாட்டு வண்டியில் வாக்கு சேகரித்த படி ஊர்வலமாக சிதம்பரம் சார் ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்தார். பின்னர் சிதம்பரம் சார் ஆட்சியரும் தேர்தல் அலுவலருமான மதுபாலன் இடம் நாம் தமிழர் கட்சியின் சார்பில் சிதம்பரம் சட்டமன்ற தொகுதியில் போட்டியிடுவதற்கான வேட்புமனுவை தாக்கல் செய்தார்.

விவசாயிகளை முன்னிறுத்தி பிரச்சாரம் செய்யும் வகையில் மாட்டுவண்டியில் கரும்புகளை கற்றுக்கொண்டு ஊர்வலமாக வந்து வேட்புமனு தாக்கல் செய்தது பொதுமக்களின் கவனத்தை வெகுவாக கவர்ந்தது.

Tags

Next Story
ai as the future