சிதம்பரம் அருகே காதல் பிரச்சினையில் 2 பெண்கள் அடுத்தடுத்து தற்கொலை

சிதம்பரம் அருகே காதல் பிரச்சினையில் 2 பெண்கள் அடுத்தடுத்து தற்கொலை
X
சிதம்பரம் அருகே காதல் பிரச்சினையில் சிக்கிய 2 பெண்கள் அடுத்தடுத்து தற்கொலை செய்து கொண்டனர்.

கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே குத்தமபாளையம் கன்னி கோவில் தெருவை சேர்ந்தவர் இளவரசி (வயது45 ).இவரது மகள் தனலட்சுமி( 19) என்பவர் கடந்த சில மாதங்களுக்கு முன்பு திருப்பூரில் காதலுடன் சென்று திருமணம் செய்து கொண்டதாக கூறப்படுகிறது. இந்நிலையில் அதே பகுதியில் வசிக்கும் வாணிஸ்ரீ என்பவரிடம் இளவரசி என் மகள் காதலித்த பையனுடன் சென்றதற்கு நீ தான் காரணம் என அவதூறாக பேசினாராம்.

அதேபோல் வாணிஸ்ரீ மாமனார் மாமியார் ஆகியோரும் திட்டியதாக கூறப்படுகிறது. இதனால் மனவேதனை அடைந்த வாணிஸ்ரீ விஷ மருந்தை குடித்து விட்டு மயக்கமடைந்தார். அருகில் உள்ளவர்கள் சிதம்பரம் ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக சேர்த்தனர். ஆனால் சிகிச்சைப் பலனின்றி வாணிஸ்ரீ உயிரிழந்தார்.

வாணிஸ்ரீ உயிரிழந்ததாக கூறப்பட்டதால் பயந்துபோன இளவரசி வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். தகவலறிந்த பரங்கிப்பேட்டை போலீசார் இருவரது உடலையும் கைப்பற்றி சிதம்பரம் அரசு மருத்துவமனையில் உடற்கூறு ஆய்வுக்காக அனுப்பி வைத்து வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர். ஒரே கிராமத்தில் இரண்டு பெண்கள் அடுத்தடுத்து தற்கொலை செய்து கொண்ட சம்பவத்தால் கிராமமே சோகத்தில் மூழ்கி உள்ளது.

Tags

Next Story
பவானிசாகர் தொகுதியில் புதிய குடிநீர் திட்டங்கள்: 1 கோடி வளர்ச்சி பணிகள் ஆரம்பம்