சிதம்பரத்தில் இன்று முதல் ஒரு மாதத்திற்கு 144 தடை: கோட்டாட்சியர் அதிரடி
பைல் படம்.
கடலூர் மாவட்டம், சிதம்பரம் நடராஜர் கோவிலில் கனகசபை மேல் ஏறி சாமி தரிசனம் செய்வதற்கு முக்கிய விஐபிக்களுக்கு மட்டும் அனுமதி அளிக்கப்பட்டிருந்தது. இதனைத்தொடர்ந்து பொதுமக்களுக்கும் அனுமதியளிக்கப்பட்டது.
இதன்பின் தீட்சிதர்கள் ஒன்றுசேர்ந்து கனகசபை மீது ஏறி சாமி தரிசனம் செய்ய தடைவிதித்தனர். இதனையடுத்து, பல்வேறு போராட்டங்கள் நடைபெற்றதன் காரணமாக சிதம்பரம் கோயிலில் சட்டம் ஒழுங்கு பிரச்னை ஏற்பட்டது.
இந்நிலையில் அரசியல் கட்சிகள், பக்த பேரவைகள், இதர போராட்டக் குழுவினர் சிதம்பரத்தில் போராட்டம் நடத்த தடைவிதித்து 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மேலும் கனகசபை மேல் ஏறி தரிசனம் செய்வது தொடர்பாக தமிழக அரசு சட்ட வல்லுநர்களுடன் ஆலோசனை நடத்திவருவதாக கோட்டாட்சியர் தெரிவித்துள்ளார்.
மேலும் இந்த பிரச்னை அரசு பரிசீலனைக்கு கொண்டுசெல்லப்பட்டுள்ளதால் அரசின் முடிவு வரும்வரை கடலூர் சிதம்பரம் கோயிலில் இன்று முதல் ஒருமாதம் 144 தடை உத்தரவு பிறப்பித்து வருவாய் கோட்டாட்சியர் ரவி ஆணை பிறப்பித்துள்ளார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu