நெய் டப்பா மாட்டின் வாயில் மாட்டி திண்டாடிய பரிதாபம்
சிதம்பரம் 23வது வார்டுக்கு உட்பட்ட நேரு நகரில் காளை மாடு ஒன்று வாயில் நெய் டப்பா மாட்டிக்கொண்டு ரத்தம் சிந்த சிந்த வலம் வந்து கொண்டிருந்தது அப்போது அதனைப் பார்த்த அப்பகுதி மக்கள் காளையின் வாயிலிருக்கும் நெய் டப்பாவை அகற்ற முடிவெடுத்து பல மணி நேரம் போராடி காளை மாட்டை கயிறுகளால் கட்டி கீழே படுக்க வைத்து வாயில் மாட்டிக் கொண்டிருந்த நெய் தகர டப்பாவை அகற்றினர்.
ஆனால் காளை மாடு அந்த இடத்திலிருந்து எழவில்லை. அருகிலிருந்தவர்கள் மயக்கமுற்ற காளை முகத்தில் தண்ணீர் அடித்து குடிப்பதற்கு தண்ணீர் காண்பித்தபோது திடீரென காளை மாடு அதற்கேற்ற கெத்தை வெளிப்படுத்தும் வகையில் கொம்புகளால் தண்ணீர் கொண்டு வந்த வாளியை குத்தித் தூக்கி விட்டெறிந்து அங்கிருந்து சென்றது. பல மணி நேரம் போராடி காளை மாட்டை காப்பாற்றியதற்கு அப்பகுதி மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். தற்போது அந்த வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.
Tags
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu