உரிய ஆவணம் இன்றி எடுத்துவரப்பட்ட இரண்டு லட்சம் பறிமுதல்

உரிய ஆவணம் இன்றி எடுத்துவரப்பட்ட இரண்டு லட்சம் பறிமுதல்
X
சிதம்பரத்தில் உரிய ஆவணம் இன்றி எடுத்துவரப்பட்ட 2 லட்சம் ரூபாய் பறிமுதல் பறக்கும் படையினர் அதிரடி.

சிதம்பரத்தில் உரிய ஆவணம் இன்றி எடுத்துவரப்பட்ட 2 லட்சம் ரூபாய் பறிமுதல் பறக்கும் படையினர் அதிரடி.

வருகின்ற சட்டமன்ற தேர்தலையொட்டி தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளது. இந்த நிலையில் சிதம்பரம் அருகே வல்லம்படுகை சோதனை சாவடி பகுதியில் தாசில்தார் லட்சுமிதேவி, காவல் உதவி ஆய்வாளர் ரவி தலைமையில் பறக்கும் படையினர் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது மயிலாடுதுறையிலிருந்து சென்னை நோக்கி வந்த வாகனத்தை நிறுத்தி சோதனை செய்ததில், மருத்துவர் சௌமியா என்பவர் ஆவணம் இல்லாமல் ரூ. 2 லட்சம் வைத்திருந்தார். அந்த பணத்தை பறிமுதல் செய்த பறக்கும் படையினர், சிதம்பரம் சப்-கலெக்டர் மதுபாலன் மற்றும் சிதம்பரம் தாசில்தார் ஆனந்திடம் ஒப்படைத்தனர்

தான் எடுத்துவந்த 2 லட்சம் ரூபாய்க்கான ஆவணம் இருப்பதாக சௌமியா தெரிவித்ததால், உரிய ஆவணத்தை காண்பித்து விட்டு பணத்தைப் பெற்றுக் கொள்ளுமாறு அதிகாரிகள் அறிவுறுத்தி சௌமியாவை அனுப்பி வைத்தனர்.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!