இளம்பெண்ணை வெட்டி விட்டு தானும் குத்திக்கொண்ட வாலிபர்

இளம்பெண்ணை வெட்டி விட்டு தானும் குத்திக்கொண்ட வாலிபர்
X

கடலூரில் கல்லூரி மாணவியை கத்தியால் வெட்டி விட்டு தானும் குத்திக்கொண்ட வாலிபர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் வேளாண் கல்லூரி உள்ளது. இக்கல்லூரியில் அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே உள்ள டி.பழூர் கிராமத்தைச் சேர்ந்த ஒரு மாணவி பிஎஸ்சி தோட்டக்கலை படித்து வருகிறார். இவர் விடுதியில் தங்கி உள்ளார்.இந்நிலையில் மாணவி விடுதிக்கு வெளியே வந்தபோது அவரை திருச்சி அருகே உள்ள லால்குடியைச் சேர்ந்த சேவியர் (28) என்ற ஆசிரியர் பயிற்சி முடித்த மாணவர் கத்தியால் வெட்டியுள்ளார். இதில் மாணவிக்கு கழுத்திலும், கையிலும் காயம் ஏற்பட்டது. இதையடுத்து அதே கத்தியால் தன்னையும் கிழித்து கொண்டதாக கூறப்படுகிறது.

இதைப்பார்த்த அங்கிருந்த சிலர் இருவரையும் மீட்டு சிகிச்சைக்காக பல்கலைக்கழகத்தில் உள்ள மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு இருவருக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது பற்றி தகவலறிந்த அண்ணாமலைநகர் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர்.கத்தியால் குத்தப்பட்ட மாணவிக்கும் அவரை குத்தியவருக்கும் இடையே காதல் இருந்துள்ளதாகவும், இந்த காதல் தகராறில் தான் மோதல் நடந்துள்ளதாக கூறப்படுகிறது. இருப்பினும் இது குறித்து அண்ணாமலைநகர் போலீசார் தொடர்ந்து பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags

Next Story
பவானிசாகர் தொகுதியில் புதிய குடிநீர் திட்டங்கள்: 1 கோடி வளர்ச்சி பணிகள் ஆரம்பம்