சிதம்பரம் நடராஜர் கோவில் ஆருத்ரா தரிசன தேரோட்டம்

சிதம்பரம் நடராஜர் கோவில் ஆருத்ரா தரிசன தேரோட்டம்
X

பிரசித்தி பெற்ற சிதம்பரம் நடராஜர் கோவில் தேரோட்டம் ஆருத்ரா தரிசன விழாவையொட்டி தேரை ஏராளமான பக்தர்கள் வடம் பிடித்து இழுத்தனர்.

கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் உலக புகழ்பெற்ற நடராஜர் கோவில் உள்ளது. அங்கு இந்த ஆண்டுக்கான மார்கழி மாத ஆருத்ரா தரிசன விழா கடந்த 21ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதனை தொடர்ந்து தினமும் பல்வேறு அலங்காரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு சுவாமி காட்சி அளித்தார். அதனைத் தொடர்ந்து ஆருத்ரா தரிசனம் தேரோட்டம் நடைபெற்றது. இதில் விநாயகர், முருகன், நடராஜர், சிவகாமசுந்தரி அம்பாள், சண்டிகேஸ்வரர் ஆகிய சுவாமிகள் தனித்தனி தேர்களில் வீதிவலம் புறப்பட்டனர்.

நடராஜர் மற்றும் சிவகாமசுந்தரி அம்பாள் தேரை ஏராளமான பக்தர்கள் வடம் பிடித்து இழுத்தனர். சம்போ மகாதேவா மற்றும் நமச்சிவாய வழங்க முழக்கங்களுடன் பக்தர்கள் கூட்டத்திற்கு இடையே மெதுவாக ஆடி அசைந்தவாறு தேர் உலா வந்தது. தேரோட்டத்தின் போது மழை பெய்தது. கொட்டும் மழையையும் பொருட்படுத்தாமல் பக்தர்கள் ஒன்று கூடி தேரை இழுத்தனர்.

Tags

Next Story
கொமதேக தலைவரின் மாபெரும் அறிவிப்பு: திமுக கூட்டணியில் எந்த பிரச்சனையும் இல்லை!