எழுத்தாளர் அசோகமித்திரன் அவர்களின் நினைவாக கோயில் குளம் புனரமைப்பு
கடலூரில் குளத்தை சீரமைத்து கொடுத்த எழுத்தாளர் அசோகமித்திரன் குடும்பத்தினர்
கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி வட்டம் குமுடிமூலையில் எழுத்தாளர் அசோகமித்திரன் அவர்களின் நினைவாக பிள்ளையார் கோயில் குளம் புனரமைக்கப்பட்டது. எழுத்தாளர் அசோகமித்திரன் அவர்களின் குடும்பத்தார்கள் அவரது மூத்த மகன் ரவிசங்கர் ஆகியோர் கலந்து கொண்டு மக்கள் பயன்பாட்டுக்கு அளித்தனர்.
இந்தக் குளம் சீரமைக்கும் பணி 2019 முதல் பகுதி பகுதியாக நடைபெற்று 2 மீட்டர் உயரத்திற்கு 164 மீட்டர் நீளம் இந்த குளத்தின் சுற்றுச்சுவர் புதிதாக அமைத்து கொடுத்துள்ளார்கள். மேலும் பொதுமக்கள் குளிக்க படித்துறையும், கால்நடைகள் நீரருந்த வசதியாக சாய் தளமும், பள்ளி குழந்தைகள் குளக்கரையில் அமர்ந்து படிக்கவும், முதியவர்கள் ஓய்வு எடுக்கவும் குளத்தில் கரையில் நான்கு சிமெண்ட் பெஞ்ச் புதிதாக அமைக்கப்பட்டுள்ளது.
இந்தத் திட்டம் சென்னை சேனிடேஷன் ஃபர்ஸ்ட் (sanitation first) நிறுவனத்தின் முதன்மை அதிகாரி திருமதி. பத்மபிரியா மூலம் நடைபெற்றது. கடலூர் சி.எஸ்.டி (CSD) நிறுவன செயலாளர் கா. ஆறுமுகம் செயல்படுத்தினார். இதற்கு கிராம ஊராட்சி மன்ற தலைவர் திருமதி. ஞானசவுந்தரி நடராஜன் மற்றும் கிராம பொதுமக்கள் ஒத்துழைப்புடன் இன்று திறக்கப்பட்டு முழு பயன்பாட்டுக்கு வந்தது. இறுதியில் இந்த நிகழ்ச்சியில் சி.எஸ்.டி (CSD) தொண்டு நிறுவன பணியாளர் பு. சண்முகம் அவர்கள் நன்றி கூறினார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu