டாஸ்மாக் கடையில் ஓட்டையைப் போட்டு ஆட்டையை போட்ட 3 பேர் கைது.

டாஸ்மாக் கடையில் ஓட்டையைப் போட்டு ஆட்டையை போட்ட 3 பேர் கைது.
X

பின்னலூர் டாஸ்மாக் கடை சுவற்றை துளையிட்டு மதுபாட்டில்களை திருடியவர்கள்

திருட்டுச் சம்பவம் நடந்து ஆறு மாதங்களுக்குப் பிறகு சிக்கியவர்களிடமிருந்து 50 ஆயிரம் மதிப்பிலான மது பாட்டில், இருசக்கர வாகனம் பறிமுதல்.

கடலூர் மாவட்டம் புவனகிரி அடுத்த சேத்தியாத்தோப்பு காவல் ஆய்வாளர் மைக்கேல் இருதயராஜ் தலைமையிலான போலீசார் ரோந்துப்பணியில் ஈடுபட்டிருந்தபோது, சேத்தியாத்தோப்பு குறுக்கு ரோடு அருகே மோட்டார் சைக்கிளுடன் நின்று கொண்டிருந்த 3 பேர், போலீசாரை பார்த்ததும், அங்கிருந்து தப்பிக்க முயன்றுள்ளனர்.

இதனால் சந்தேகமடைந்த போலீசார், மூன்று பேரையும் மடக்கி பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில், கடந்த மே மாதம் பின்னலூர் டாஸ்மாக் கடை சுவற்றை துளையிட்டு, உள்ளே புகுந்து ரூ.97 ஆயிரம் மதிப்புள்ள மதுபாட்டில்களை திருடியதும் தெரியவந்தது.

இதையடுத்து சேத்தியாத்தோப்பு அடுத்த மருவாய் கிராமத்தை சேர்ந்த கிறிஸ்துராஜ் (வயது 22), சின்னத்தம்பி (49), ஜான் போஸ்கோ (26) ஆகியோர் மூவரையும் கைது செய்தனர்.

மேலும் அவர்களிடம் இருந்து ரூ.50 ஆயிரம் மதிப்பிலான மதுபாட்டில்கள், ரூ.5 ஆயிரம் ரொக்கம் மற்றும் ஒரு மோட்டார் சைக்கிளை பறிமுதல் செய்து தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags

Next Story
why is ai important to the future