ஜிப் திருடியவரை மடக்கிப் பிடித்த காவலர்

ஜிப் திருடியவரை மடக்கிப் பிடித்த காவலர்
X
அரசு ஜீப்பை கடத்தியவரை மடக்கி பிடித்த தலைமை காவலருக்கு எஸ்.பி.பாராட்டு.

கடலூர் உழவர் சந்தை முன்பு இன்று காலை நிறுத்தி வைக்கப்பட்டிருந்த அரசு ஜீப்பை, யாரோ கடத்தி சென்றுள்ளதாக தகவல் கிடைத்தவுடன் தனிப்பிரிவு வான்செய்தி மூலம் மாவட்டம் முழுவதும் வாகனத்தை பிடிக்க போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. புதுச்சத்திரம் காவல் நிலைய தலைமைக் காவலர் சிவஞனமுத்து அவர்கள் தனது மோட்டார் சைக்கிள் மூலம் விரட்டிச் சென்று பி.முட்லூர் அருகில் வாகனத்தை மடக்கி அதனை ஒட்டி வந்த மணிவேல் வயது 31 கருப்பஞ்சாவடி,

த.பாளையம் என்பவரை மடக்கி பிடித்தார். மாவட்ட காவல் கண்காணிப்பாளர் M.ஸ்ரீ அபிநவ் ஐ.பி.எஸ் அவர்கள் தலைமை காவலரின் சிறப்பான பணியினை பாராட்டி வெகுமதி வழங்கி, பாராட்டு பத்திரம் வழங்கினார்.

Tags

Next Story